/* */

சுற்றுலா தலங்களுக்கு தடை- வெறிச்சோடிய தனுஷ்கோடி

சுற்றுலா தலங்களுக்கு தடை- வெறிச்சோடிய தனுஷ்கோடி
X

கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் தனுஷ்கோடி வெறிச்சோடியது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதனடிப்படையில் தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதித்தும், இரவுநேர ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் சுற்றுலா தலமான இராமேஸ்வரத்திற்கு சுற்றுலா பயணிகளின் வரத்து இன்று குறைவாக உள்ளதால், இராமேஸ்வரம் 4 ரத வீதிகளில் அக்னி தீர்த்த கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது.

இதேபோல் தனுஷ்கோடி செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், புதுரோடு பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு தனுஷ்கோடி செல்லும் வாகனங்களை திருப்பி அனுப்பி வைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் நகரின் முக்கிய பகுதிகளில் நகராட்சி ஊழியர்களும், தூய்மை பணியாளர்களும் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகமும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தி கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

Updated On: 20 April 2021 8:49 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை: ஒரே நாளில் 624.50 மி.மீ
  2. காஞ்சிபுரம்
    அயோத்தி செல்லும் வில் மற்றும் அம்புவிற்கு காஞ்சிபுரத்தில் சிறப்பு...
  3. நாமக்கல்
    தமிழகத்தில் மணல் குவாரிகளை திறந்து பொதுமக்களுக்கு மணல் வழங்க
  4. நாமக்கல்
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாமக்கல் மாவட்ட கலெக்டர்...
  5. லைஃப்ஸ்டைல்
    பிறந்தோம் சாதிப்போம்..! பிறந்தநாள் வாழ்த்து..!
  6. திருமங்கலம்
    மதுரை சோழவந்தான் அருகே இலந்தை குளம் முத்தம்மாள் கோயில் மகா...
  7. ஈரோடு
    மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,468 கன அடியாக அதிகரிப்பு
  8. திருத்தணி
    திருத்தணி அருகே இருசக்கரத்தின் மீது கார் மோதி கணவன், மனைவி உயிரிழப்பு
  9. வீடியோ
    🔴LIVE : முரசு மக்கள் கட்சியின் தலைவர் தேவன் காவல் நிலையங்களின் மீது...
  10. ஈரோடு
    பெருந்துறை பகுதியில் கனமழை: தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக ஓடிய மழைநீர்