/* */

மண்டபம் அருகே கார் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து: 4 பேர் பலி

மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் கார் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து. இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேர் பலி.

HIGHLIGHTS

மண்டபம் அருகே கார் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து: 4 பேர் பலி
X

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த மரைக்காயர்பட்டிணத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் பெட்ரோல் பங்கிற்கு இன்று காலை வேலைக்கு செல்ல ஒரு இரு சக்கர வாகனத்தில் மண்டபம் மறவர் தெருவை சேர்ந்த ஜெகன் (42), ஜெகதீஷ் (22) மற்றும் மகேஷ் (40) ஆகிய மூவரும் மரைக்காயர்பட்டிணம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து இராமேஸ்வரத்திற்கு சுவாமி தரிசனம் செய்ய ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் அதிவேகமாக காரில் வந்துள்ளனர்.

அப்போது கார் எதிரே வந்த இருசக்கரம் மீது நேருக்கு நேர் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த மூவரும் சம்பவ இடத்திலே பலியாகினர்.மேலும் கட்டுபாட்டை இழந்த கார் தேசிய நெடுஞ்சாலையின் அருகே உள்ள பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தின் போது தேசிய நெடுஞ்சாலையில் நடைபயிற்சி சென்ற ஓய்வுபெற்ற சார்பு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி படுகாயத்துடன் சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்ற போது உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற இராமநாதபுரம் எஸ்.பி கார்த்தி விபத்து குறித்து கேட்டறிந்தார். மேலும் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக இராமநாதபுரம் அரச மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விபத்து குறித்து காரின் ஓட்டுநரை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்த மண்டபம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 May 2022 12:31 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?