/* */

இராமேஸ்வரத்தில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலை: வாகன ஓட்டிகள் அவதி

பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள், குண்டும் குழியுமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் அவதி.

HIGHLIGHTS

இராமேஸ்வரத்தில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலை: வாகன ஓட்டிகள் அவதி
X

பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள், குண்டும் குழியுமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் அவதி.

இராமேஸ்வரம் நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவர வேண்டும் என பல ஆண்டுகள் பொதுமக்கள் கோரிக்கையை அடுத்து கடந்த 2018ம் ஆண்டு 60 கோடி திட்ட மதிப்பீட்டில் பாதாளச் சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டு, 2 ஆண்டுக்குள் முடிக்க பணி ஒப்பந்தம் போடப்பட்டு பணிகள் தொடங்கியது. இந்த நிலையில் பாதாளச் சாக்கடை திட்டத்திற்காக ராமேஸ்வரம் நகர் முழுவதும் சாலைகளில் ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக பணிகள் சில மாதங்கள் நிறுத்தப்பட்டது. மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டு மீதம் உள்ள பகுதிகளில் குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இராமநாதசுவாமி திருக்கோயிலில் சுற்றியுள்ள நான்கு ரதவீதி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பணிகள் முடிக்கப்பட்டு ஒரு சில பகுதிகளில் மட்டும் சாலைகள் போடப்பட்டது. இராமேஸ்வரத்திற்கு வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடுவதற்காக மண்டி தெரு வழியாக செல்வது வழக்கம்.

இந்த நிலையில் மண்டி தெரு வழியாக செல்லும்போது பாதாளச் சாக்கடைத் திட்டதிற்காக தோண்டப்பட்ட இடத்தில் குண்டும் குழியுமாக இருந்து வருவதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டிச் செல்லும்போதும், பக்தர்கள் கூட்டம் கூட்டமாக நடந்து செல்லும் போதும் பொதுமக்கள் கால் தடுக்கி கீழே விழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இப்படி ஆயிரக்கானக்கான மக்கள் நடமாட்டம் உள்ள முக்கிய தெருக்களில் சாலைகளை சீர் செய்யாமல் நகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தாமல் மெத்தன போக்காக இருந்து வருகிறது. உடனே மக்கள்கள் அதிகம் நடந்து செல்லும் சாலைகளை கண்டறிந்து உடனடியாக சாலைகளை சீர் செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 16 Dec 2021 12:20 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?