/* */

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை: கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

.பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் ஆண்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

HIGHLIGHTS

பெண்களுக்கு எதிரான பாலியல்  வன்முறை:  கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
X

 பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புதுக்கோட்டை மன்னர் கல்லூரி அருகே கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்

பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்க கோரி புதுக்கோட்டையில் மன்னர் கல்லூரி மாணவர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் தற்போது கல்லூரி மற்றும் பள்ளிகளில் அதிகரித்து வரும் பாலியல் கொடுமைகளால் கல்லூரி மாணவிகள் மற்றும் பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து வரும் சூழ்நிலை இருந்து வருகிறது.இதனை தடுக்கும் விதத்தில் தற்போது தமிழக அரசு அதனை பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது.

அதேபோல் கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை காவல்துறை கைது செய்து கல்லூரிகளுக்கும் சில் வைத்தும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கல்லூரி மாணவி மற்றும் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருவதாக கூறி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை மன்னர் கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் திடீரென 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று சேர்ந்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து வரும் பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் ஆண்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கல்லூரி முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 24 Nov 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  5. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  6. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  7. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  10. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்