/* */

ஆன்லைன் வகுப்புகள் முழுமையாக பதிவு செய்ய வேண்டும் திருச்சி மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் தகவல்

''ஆன்லைன் வகுப்புகள் முழுமையாக பதிவு செய்ய வேண்டும்,'' என்று, திருச்சி மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

HIGHLIGHTS

''ஆன்லைன் வகுப்புகள் முழுமையாக பதிவு செய்ய வேண்டும்,'' என்று, திருச்சி மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே ஆயுதப்படை கட்டிடம் முன் ஆயுதப் படை அலுவலர்கள் முயற்சியில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து மரக்கன்றுகள் வளர்க்கும் முயற்சியை திருச்சி மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

திருச்சி மண்டலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 50 நபர்களை காவல்துறை சார்பில், மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி உள்ளோம். தனியாக உள்ள முதியோர்களை குறிவைத்து குற்றச்செயல்கள் நடைபெற்று வருவதால் வாரம் ஒரு முறை காவல்துறையினர் அதுபோன்று உள்ள முதியோர்களை சந்தித்து பாதுகாப்பு சார்ந்து கேட்டறியப்பட்டு வருகின்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 32 கடலோர பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுக்களில் பெண்கள் இடம் பெற வேண்டும் என்ற அறிவிப்பாளர் குழுக்களில் பெண்கள் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவானது கடல் வழியாக நடைபெறும் கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களை பொதுமக்கள், காவல்துறையினர் இணைந்து தடுக்க வழி வகுக்கும். மதுரையில் ஆதரவற்ற காப்பகத்தில் நடைபெற்ற சம்பவத்தை போன்று திருச்சி மண்டலத்தில் நடைபெறாமல் இருக்க அனைத்து ஆதரவற்ற காப்பகங்களும் கண்காணிக்கப்பட்டு இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நாளுக்கு நாள் சைபர் கிரைம் குற்றங்கள் வித,விதமாக நடைபெற்று வருகின்றது. ஸ்மார்ட் போன்களால் நடைபெறும் குற்றங்கள் அதிகரிப்பதைத் தடுக்க வங்கி தொடர்பான விஷயங்களையும், சுய விவரங்களையும் சமூக வலைத்தளத்தில் பகிர்வதை தவிர்க்க வேண்டும். ஓ.டி.பி. போன்ற ரகசிய குறியீட்டு எண்ணை யாரிடமும் தெரிவிக்கக் கூடாது.

திருச்சி மண்டலத்தில் சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க கிராமப்புறங்கள் மற்றும் கல்லூரிகளில் சைபர் கமிட்டி அமைக்கப்பட்டு சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தமிழக அரசு மிகச் சரியான சட்ட திட்டங்களை வகுத்து பள்ளிகளுக்கு தெரிவித்துள்ளனர். சட்ட திட்டங்களை கடைப்பிடிக்காத பள்ளிகளில் குற்றங்கள் நடைபெறும் பொழுது அந்த பள்ளி நிர்வாகம் தான் பொறுப்பாகும்.

அதேபோல், ஆன்லைன் வகுப்புகள் முழுமையாக பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். கடைப்பிடிக்காமல் குற்றங்கள் நடைபெறும் பட்சத்தில் அதற்கும் பள்ளி நிர்வாகம் தான் பொறுப்பாகும் என்பதை உணர வேண்டும்.

இவ்வாறு திருச்சி மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.


Updated On: 2 July 2021 2:22 PM GMT

Related News