/* */

நகர பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அளவிடும் பணியை தொடங்கிய நகராட்சி அதிகாரிகள்

நகரப்பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வர்த்தக சங்கங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக ஒருமித்த கருத்தை கூறியுள்ளனர்

HIGHLIGHTS

நகர பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அளவிடும் பணியை தொடங்கிய நகராட்சி அதிகாரிகள்
X

புதுக்கோட்டை கீழராஜ வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது அளவிடும் பணியில் ஈடுபட்டுள்ள நகராட்சி அதிகாரிகள்

நகர பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான முன்னோட்டமாக அளவிடும் பணியை நகராட்சி அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

புதுக்கோட்டை நகராட்சியில் 42 வார்டுகள் உள்ளது மிகவும் முக்கியமான பகுதியாக, புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட கீழராஜ வீதி, மேல ராஜவீதி, அண்ணா சிலை, எம்ஜிஆர் சிலை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், தெற்கு ராஜவீதி, கீழே இரண்டாம் விதி என பல்வேறு பகுதிகள் புதுக்கோட்டையில் முக்கிய பகுதிகளாக இருந்து வருகிறது.

புதுக்கோட்டை நகர பகுதிகளில் இருக்கும் முக்கிய வீதிகளில் அதிக அளவில் பல்வேறு வியாபாரிகள் கடைகளையும் நடத்தி வருகின்றனர். குறிப்பாக நகைக்கடைகள் மளிகை கடைகள் ஹோட்டல் பர்னிச்சர் என பல்வேறு கடைகள் அதிக அளவில் இந்த வீதிகளில் இயங்கி வருகிறது. தொடர்ந்து இந்த வீதிகளில் தினந்தோறும் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் அந்த பகுதிகளில் பல்வேறு பொருட்களை வாங்குவதற்கு இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர்.

இதனால தினம் தோறும் அதிக அளவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன நெரிசலில் பொது மக்கள் சிக்கித் தவிக்கும் நிலையில் போக்குவரத்து காவலர்கள் தினம்தோறும் மிகுந்த சிரமப்பட்டு போக்குவரத்தை சரி செய்து வருகின்றனர்.இந்த நிலையை புதுக்கோட்டை நகர பகுதிகளில் போக்குவரத்தை சீர் செய்ய மற்றும் மழைக்காலங்களில் முக்கிய வீதிகளில் ஆக்கிரமிப்புகளால் சாலைகளில் மழைநீர் தேங்கி மிகவும் சிரமம் ஏற்பட்டு வரும் சூழ்நிலை இருந்து வருகிறது. அந்த நிலைமையை மாற்றுவதற்காக காவல் துறை போக்குவரத்துத் துறை நகராட்சி நெடுஞ்சாலைத்துறை வர்த்தக சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் நகரப் பகுதிகளில் உள்ள அனைத்து வர்த்தக சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஒருமித்த கருத்தாக நகரப்பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வர்த்தக சங்கங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என கூறியதையடுத்து, இன்று புதுக்கோட்டை நகராட்சி உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் புதுக்கோட்டை நகர பகுதியான கீழராஜ வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அளவிடும் பணி இன்று தொடங்கினர். நகராட்சி அதிகாரிகள் ஒவ்வொரு கடையின் முன்பு நகராட்சி இடத்திற்கான வரைபடத்தை வைத்துக்கொண்டு ஒவ்வொரு கடையும் முன்பும் எவ்வளவு ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அளவிட்டு அதனை குறியீடு செய்யும் பணிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 8 Dec 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  3. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  5. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  8. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  9. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  10. லைஃப்ஸ்டைல்
    முகப்பொலிவின் மந்திரம் - சாலிசிலிக் ஆசிட்!