/* */

ரூ. 93 லட்சம் மதிப்பு ஆக்சிஜன் உற்பத்தி மையம்; அமைச்சர்கள் திறப்பு

புதுக்கோட்டையில் ரூ. 93 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

HIGHLIGHTS

ரூ. 93 லட்சம் மதிப்பு ஆக்சிஜன் உற்பத்தி மையம்; அமைச்சர்கள் திறப்பு
X

ஆக்சிஜன் மையத்தை திறந்து வைத்து பார்வையிடும் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன். 

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ 93 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையம் உருவாக்கப்பட்டுள்ளது ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ரூ 93 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் மையம் இன்று புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் 600 நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் இங்கு உற்பத்தி செய்யப்படும் உள்ளது.

அந்த மையத்தில் ஒரு மணி நேரத்தில் 200 நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு மருத்துவக் கல்லூரியில் ஆக்சிஜன் பற்றாக்குறை என்பது இனி இருக்காது என அவர் தெரிவித்தார்.

மேலும், நீதிமன்றங்களில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு இன்று நீதித்துறை சார்பாக எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது முழுக்க முழுக்க நீதிமன்ற கட்டுப்பாட்டின் கீழ் தேர்வு நடைபெறுகிறது வெளிப்படைத் தன்மையோடு எந்தவித முறைகேடுகளும் இடம் கொடுக்காமல் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இந்த தேர்வு நடைபெறுகிறது என்றார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உள்ள பேரறிவாளன் அவரது உடல்நிலை காரணமாகவும் தொடர் சிகிச்சை பெற்று வருவதால் தான் பேரறிவாளனின் பரோல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று இதே வழக்கில் சிறையில் உள்ள நளினி முருகன் ஆகியோர் தங்களது உடல் நிலை குறித்து அவருடைய உறவினர்கள் பரோலில் விடுதலை செய்வதற்கு விண்ணப்பித்தால் தமிழக அரசு அவர்களை பரோலில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்

உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்கக் நடவடிக்கை எடுப்போம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளதுஅதற்கான முயற்சியில் தமிழக முதல்வர் ஈடுபடுவார் என்றார்.

Updated On: 31 July 2021 10:43 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  2. லைஃப்ஸ்டைல்
    நண்பா..மனைவியை லவ் பண்ணுடா..! திருமண வாழ்த்து..!
  3. இந்தியா
    பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சியில் அவசர...
  4. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...
  5. வீடியோ
    DMK ஆட்சி, Kamarajar ஆட்சி Seeman சொன்ன பதில் !#seeman #seemanism #ntk...
  6. வீடியோ
    Kamarajar-ரிடம் படம் எடுக்க சொன்ன இயக்குநர் Sundaram ?#seeman...
  7. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  8. சினிமா
    இந்தியன் 2 படத்தில் இந்தியன் 3 அப்டேட்.. சூப்பர் சர்ப்ரைஸ்!
  9. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  10. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...