/* */

தமிழகத்தின் கலாசாரம், பண்பாட்டினை உலகறியச் செய்வது நமது கலைகளே

இதன் மூலமாக நாம் சொல்ல நினைக்கும் கருத்துகளை எளிதாக மக்களிடையே கொண்டு சேர்க்க வாய்ப்பாக அமையும்.

HIGHLIGHTS

தமிழகத்தின் கலாசாரம், பண்பாட்டினை உலகறியச் செய்வது நமது கலைகளே
X

மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் கலை நிகழ்ச்சிகளை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பார்வையிட்டார்.

தமிழகத்தின் கலாசாரம், பண்பாட்டினை உலகறியச் செய்வது நமது கலைகளே என்றார் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேச்சு.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் கலை நிகழ்ச்சிகளை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று (08.12.2022) பார்வையிட்டார்.

பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது; தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின் படி, அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைத் திருவிழா மாவட்டம் தோறும் நடத்தப்படுகிறது. இதன் மூலம் மாணவ, மாணவிகளின் தனித் திறமைகளை வெளிக் கொணர நல்ல வாய்ப்பாக அமைந்து வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க நிகழ்வில் தமிழகத்தின் கலாசாரம் மற்றும் பண்பாடுகளை உலகறியச் செய்யும் வகையில், நம் மண் சார்ந்த கலை நிகழ்ச்சிகளை, பாரத பிரதமர் முன்னிலையில் உலகமெங்கும் உணர்த்திக் காட்டியவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஆவார். அதன்படி தமிழகத்தில் கலைகளுக்கு முன்னுதாரனமாக புதுக்கோட்டை மாவட்டம் விளங்கி வருகிறது.

மேலும் கொரோனா பேரிடர் காலத்தில் வீட்டில் முடங்கியிருந்த மாணவ, மாணவிகளுக்கு விடுதலை அளிக்கும் வகையில் இக்கலைத் திருவிழாக்கள் மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலமாக நாம் சொல்ல நினைக்கும் கருத்துகளை எளிதாக மக்களிடையே கொண்டு சேர்க்க வாய்ப்பாக அமையும். இங்கு நடனமாடிய பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் சுற்றுச் சூழல் பாதிப்புகள் குறித்தும், உரம் மற்றும் பூச்சி மருந்து பயன்பாடுகளால் மனிதர்களுக்கு ஏற்படும் விளைவுகள் குறித்தும், மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் எடுத்துரைத்தனர். கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் பங்கு பெறுபவர்கள் மட்டும் மகிழ்ச்சி அடையாமல், பார்வையிடும் அனைவரையும் மகிழ்ச்சியில் உள்ளாக்குவதே நமகு கலைகளின் சிறப்பு அம்சமாகும்.

எனவே பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் நடத்தப்பட்டு வரும் கலை நிகழ்ச்சிகளில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அனைவரும் சிறப்பான முறையில் தங்களது பங்களிப்பை செலுத்தி, தமிழக அரசால் வழங்கப்படும் 'கலையரசன்" மற்றும் 'கலையரசி" விருதுகளை பெற வாழ்த்துகிறேன் என்றார் சுற்றுச் சூழல், கால நிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ஜெயலட்சுமி, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன், மாவட்ட உதவித் திட்ட அலுவலர் சி.தங்கமணி, மாவட்ட உதவித் திட்ட அலுவலர் ஜெ.சுதந்திரன், வட்டாட்சியர் விஜயலெட்சுமி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதி நிதிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்;

Updated On: 8 Dec 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  2. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  3. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  4. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  5. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  10. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து