/* */

குடிநீர்த்தேவையை பூர்த்தி செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: நிர்வாக இயக்குநர் தகவல்

தினமும் 70.877 மில்லியன் லிட்டர் நீர் தேவைப்படும் நிலையில் தற்போது சுமார் 61.487 மில்லியன் லிட்டர் விநியோகிக்கப்படுகிறது.

HIGHLIGHTS

குடிநீர்த்தேவையை பூர்த்தி செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: நிர்வாக இயக்குநர் தகவல்
X

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி, மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு முன்னிலையில், அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப் பட்டு வருவதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்தும், ஜெ.ஜெ.எம். திட்டத்தின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்தும், மிஷன் இயக்குநர் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி, மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு முன்னிலையில், அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட கோவில்பட்டியில் 25 இலட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியையும் மற்றும் புதிதாக தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்படவுள்ள திருவப்பூர் அருகே உள்ள இடத்தையும் பார்வையிட்டு, பின் நார்த்தாமலை ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரத்தில் 15வது மத்திய நிதிக்குழு திட்டத்தின் மூலம் வீடுகளுக்கு குழாய் இணைப்பின் மூலம் குடிநீர் வழங்கி செயல்படுத்தப்பட்ட பணியையும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி ஆய்வு செய்தார்.

பின்னர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் தெரிவித்ததாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் 39 திட்டங்களின் மூலம் 2 நகராட்சிகள், 4 பேரூராட்சிகள், 4062 ஊரக குடியிருப்புகளைச் சேர்ந்த 17,10,063 பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நாள்தோறும் 70.877 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. தற்பொழுது நாள்தோறும் சுமார் 61.487 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

மேலும் புதுக்கோட்டை நகராட்சியில் பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப நாள்தோறும் தேவைப்படும் 40 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம், மணல்மேடு கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் ரூ.670 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. மேலும் புதுக்கோட்டை நகராட்சி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் உள்ள குடிநீர் குழாய்களை சீர்ப்படுத்தும் வகையில் ரூ.75.06 கோடி மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசு அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, அரிமளம், ஆவுடையார்கோவில், புதுக்கோட்டை மற்றும் மணமேல்குடி ஒன்றியங்களைச் சார்ந்த 754 ஊரகக் குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் வகையில் ரூ.756.56 கோடி மதிப்பீட்டிலும், விராலிமலை, அன்னவாசல், குன்றாண்டார்கோவில், பொன்னமராவதி மற்றும் திருமயம் ஒன்றியங்களைச் சேர்ந்த 1094 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் வகையில் ரூ.550.43 கோடி மதிப்பீட்டிலும் மூன்றாம் நபர் கலந்தாலோசகர் மூலம் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது.

இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் சூழ்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய இயலும். புதுக்கோட்டை நகராட்சிக்கு வரையறுக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு வாரிய பொறியாளர்களுக்கு உரிய அறிவுரைகளையும், இத்திட்டத்தில் உள்ள குறைபாட்டை சரிசெய்ய தகுந்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டது என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளர் முரளி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, மேற்பார்வை பொறியாளர் மாதவன், நிர்வாகப் பொறியாளர்கள் அயினான், அய்யாசாமி, எழிலரசன், வசந்தி, உதவி நிர்வாகப் பொறியாளர்கள் கருப்பையா, ராஜகோபால், நிர்வாகப் பொறியாளர் நிர்மலா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஸ்ருதி, நகராட்சி ஆணையர் நாகராஜன், நகராட்சிப் பொறியாளர் சேகரன், பேரூராட்சி செயல் அலவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.



Updated On: 26 Nov 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!