/* */

புதுக்கோட்டையில் மாபெரும் புத்தக விற்பனைக் கண்காட்சி தொடக்கம்

புத்தகக் கோட்டையான புதுக்கோட்டையில் 16 - ஆவது ஆண்டாக இதே இடத்தில் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் மாபெரும் புத்தக விற்பனைக் கண்காட்சி தொடக்கம்
X

புதுக்கோட்டையில் நடைபெறும் புத்தக விற்பனை கண்காட்சியில் பங்கேற்ற மாணவர்கள், புத்தக ஆர்வலர்கள்

புதுக்கோட்டையில் சுமார் 1 லட்சம் புத்தகங்களைக் கொண்ட மாபெரும் புத்தக விற்பனைக் கண்காட்சி நடைபெறுகிறது.

சிதம்பரம், சேத்தியாதோப்பு, வி.ஏ. அபிநயா புத்தக நிலையம் சார்பில் 16-ஆவது ஆண்டாக புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் உள்ள ஸ்ரீமீனாட்சி மகாலில்(ராதா கபே) புத்தக விற்பனை கண்காட்சி 18.3.2023 முதல் 9.4.2023 வரை நடைபெறுகிறது.

புதுக்கோட்டை நகரில் வடக்கு ராஜவீதி(ராதாகபே) மீனாட்சி மகாலில் நடைபெற்று வரும் கண்காட்சியை புதுக்கோட்டை மாவட்ட கம்பன் கழகச் செயலர் ஆர். சம்பத்குமார் மற்றும் பள்ளி மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டு புத்தகங்களை தேர்வு செய்தனர்.

இந்த கண்காட்சியில், எழுத்தாளர்கள் கல்கி, சாண்டில்யன், சோ, பாலகுமாரன், லட்சுமி, சுஜாதா, ரா.கி. ரங்கராஜன், எஸ். ராமகிருஷ்ணன், , கண்ணதாசன், ஜெயகாந்தன், ஜெயமோ கன், ஓஷோ, ரமணிச்சந்திரன், முத்துலட்சுமி ராகவன், மல்லிகாமணிவண்ணன், பாலமுருகன், இந்திரா சவுந்தர் ராஜன், உள்ளிட்ட முன்னணி எழுத்தாளர்களின் நூல்கள், கவிஞர்கள் பாரதி, பாரதிதாசன், வாலி, வைரமுத்து, நா.முத்துக்குமார் எழுதிய கவிதை கட்டுரை நூல்கள்.

மற்றும் நாவல்கள், கவிதை, இலக்கியம், இலக்கணம், மருத்துவம், சுயமுன்னேற்றம், பொதுகட்டுரைகள், ஆன்மீகம், ஜோதிடம், குழந்தை வளர்ப்பு, கல்வி, யோகா, சமையல் நூல்கள், போட்டித்தேர்வுக்கான புத்தகங்கள் உள்பட சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டில் கவனம் ஈர்த்த முக்கிய நூல்களான ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் மு, ராஜேந்திரன் எழுதிய சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவல் காலாபாணி, நாவல் 1801, குடவாயில் சுப்பிரமணியன் இராஜராஜேச்சரம், தமிழர் கோயில் கலை மரபு, சோழர் வரலாறு.

அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு சுமார் 200 தலைப்புகளில் எழுதிய நூல்களும், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எழுதிய தன்னம்பிக்கை நூல்கள், தெற்கிலிருந்து ஒரு சூரியன், மாபெரும் தமிழக்கனவு, கிரியாவின் தமிழ்அகராதி ஆகிய படைப்புகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

புத்தக கண்காட்சி நிர்வாகி விஜயரங்கன் கூறியதாவது: புத்தகக் கோட்டையான புதுக்கோட்டையில் 16 -ஆவது ஆண்டாக எங்கள் நிறுவனம் சார்பில் புத்தகக்கண்காட்சி நடத்தப்படுகிறது. அதற்கு, புதுக்கோட்டை மாவட்ட மக்கள் அளித்து வரும் பேராதரவே முக்கிய காரணம்.நடப்பாண்டுக்கான புத்தக விற்பனை கண்காட்சி மார்ச் மாதம் 18-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 9 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மக்களின் ஆதரவைப் பொருத்து புத்தகக் கண்காட்சி நடைபெறும் நாள்கள் நீட்டிக்கப்படும்.

காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் விற்பனை கண்காட்சியில், வாசகர்கள் வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும் அதன் விலையில் 10 சதவீதம் சலுகை வழங்கப்படுகிறது.ஞாயிற்றுக்கிழமையும் விற்பனை கண்காட்சி நடைபெறும் என்றார் அவர்.

Updated On: 19 March 2023 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?