/* */

பெரம்பலூர்: மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய எண்கள் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்கான எண்களை பாப்புலர் பிரண்ட் அமைப்பு அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

பெரம்பலூர்: மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய எண்கள் அறிவிப்பு
X

பெரம்பலூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் தலைவர் சையது அபுதாஹிர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே நீர் தேங்கி பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்ளது. மேலும், பல்வேறு அணைகள் நிரம்பியுள்ள நிலையில் அதிகப்படியான நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் ஆற்றின் கரையோர மக்கள் அதிக சிரமத்திற்கு உள்ளாகக் கூடிய சூழல் உள்ளது.

இச்சூழலை எதிர்கொள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பேரிடர் மீட்புக் குழுவினர் மக்களுக்கு உதவக்கூடிய பணிகளில் எந்நேரமும் தயார் நிலையில் உள்ளனர். பாதிப்புகள் ஏற்படக் கூடிய பகுதிகளுக்கு உடனே சென்று மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கக் கூடிய பணிகளில் ஈடுபடவும் தயாராக உள்ளனர்.

அவசர உதவி எண்கள்- பெரம்பலூர் பகுதி-7418931491

வேப்பந்தட்டை 9566438163

ஆலத்தூர்பகுதி9994731482

குன்னம் பகுதி 7826941061

பெரம்பலூர் மாவட்ட பகுதிகளில் மழை காரணமாக பாதிப்புகள் ஏற்பட்டால் அப்பகுதி மக்கள் உடனே எங்களை தொடர்பு கொண்டால் தேவையான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 8 Nov 2021 12:03 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  3. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.
  4. இராஜபாளையம்
    இராஜபாளையம் அருகே ,போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றவர்களுக்கு கை,...
  5. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!
  6. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  7. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  8. லைஃப்ஸ்டைல்
    50 அசத்தலான தமிழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு