/* */

மலேசியாவில் ஏப்ரல் 1ம் தேதி முதல் சகஜ நிலை திரும்பும் என தூதர் தகவல்

மலேசியாவில் ஏப்ரல் 1ம் தேதி முதல் சகஜ நிலை திரும்பும் என தூதர் தகவல் தெரிவித்தார்.

HIGHLIGHTS

மலேசியாவில் ஏப்ரல் 1ம் தேதி முதல் சகஜ நிலை திரும்பும் என தூதர் தகவல்
X

 மலேசிய நாட்டின் தூதர் அப்துல் ஹமீது ஹிதாயத் பெரம்பலூரில் பேட்டி அளித்தார்.

இந்திய நாட்டிற்கான மலேசிய தூதரும் அந்நாட்டிற்கான ஹை கமிஷனருமான அப்துல் ஹமீது ஹிதாயத்பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி யிலுள்ள தொழிலதிபர் டத்தோ பிரகதீஷ் குமார் என்பவர் இல்லத்திலிருந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் கோரோனோ தொற்றினால் மலேசிய நாட்டில் பணியாற்றிய சுமார் 2 மில்லியன் தொழிலாளர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பியதால் மலேசியாவில் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இதனால் தொழிலாளர்கள் மட்டுமின்றி நிறுவனங்களும் பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது என்றார்.

மேலும் மலேசிய நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 1.ம் தேதி முதல் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளால் மீண்டும் சகஜ நிலை திரும்பும் என குறிப்பிட்ட அவர், தொழிலாளர்கள் மீண்டும் மலேசியாவிற்கு திரும்ப முடியும். நிறுவனங்கள் வழக்கம்போல செயல்படும்என்றும் தெரிவித்தார்.மலேசியா திரும்பும் இந்தியதொழிலாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

உக்ரைன் ரஷ்யா போரினால் மலேசியாவிற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் மலேசியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட வில்லை எனவே மலேசியாவில் படிக்கும் இந்திய மாணவர்களை பற்றி அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர்தெரிவித்தார்.

Updated On: 21 March 2022 5:32 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?