/* */

பெரம்பலூர்: நகராட்சி தூய்மை பணியாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் நகராட்சி தூய்மை பணியாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர்: நகராட்சி தூய்மை பணியாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்
X

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் தூய்மை பணியாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு நவம்பர் 8-ம் தேதியான இன்று காலை முதல் நகராட்சி தூய்மை பணியாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், இதில் பெரம்பலூர் நகராட்சியில் பணிபுரியும் சி.ஐ.டி.யு. ஒப்பந்த ஊழியர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்த தினக்கூலி ரூபாய் 580/- வழங்கிட வேண்டும். நிலுவை தொகையுடன் வழங்கிட வேண்டும். ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த இ. பி. எஃப், இ. எஸ். ஐ , இன்சுரன்ஸ் திட்டத்திற்கு விவரங்கள் வழங்கிட வேண்டும், கடந்த ஒப்பந்த காலங்கள் மற்றும் தற்பொழுது உள்ள ஒப்பந்த காலங்களில் செலுத்தப்பட வேண்டிய ஈ.பி.எப். தொகையை முழுமையாக செலுத்த வேண்டும். ஒப்பந்தத்தில் செலுத்தப்படாத இ.பி.எப். தொகையை ஊழியர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட வேண்டும். கொரோனா காலத்தில் தூய்மை காவலர்கள் என்று அறிவிக்கப்பட்ட சிறப்பு ஊதியம் வழங்கப்பட வேண்டும். இ.எஸ்.ஐ. திட்டத்திற்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். பாதுகாப்புச் சாதனங்கள் வழங்கிட வேண்டும் , குப்பைகளை கொட்ட இடம் ஒதுக்கி தரவேண்டும். என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறித்தி பெரம்பலூர் நகராட்சியில் பணிபுரியும் 175 ஒப்பந்த ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூய்மை பணியாளர்களின் உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் மாவாட்ட செயலாளர். கலைசெல்வன், தலைமயில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தலைவர் பொன்ராஜ், சி.ஐ.டி.யு. சங்க மாவட்ட தலைவர் அகஸ்டின்,துணைத் தலைவர் சிவானந்தம்,செயலாளர் ரெங்கநாதன்,அகில இந்திய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ், கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர்ராஜேந்திரன், உள்ளிட்ட துணி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Nov 2021 11:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?