/* */

உரம் விற்பனையாளர்களுக்கு பெரம்பலூர் வேளாண் இணை இயக்குனர் எச்சரிக்கை

அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என உர விற்பனையாளர்களுக்கு வேளாண் இணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

உரம் விற்பனையாளர்களுக்கு பெரம்பலூர் வேளாண் இணை இயக்குனர் எச்சரிக்கை
X

பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது மானாவாரி சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது மாவட்டத்தில் உர இருப்பு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் 811 டன் யூரியா, 425டன் டி.ஏ.பி., 576 டன் பொட்டாஷ் மற்றும் 2282 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் அக்டோபர் மாதத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட யூரியா உரம் 1000 மெ.டன் இந்த வார இறுதியில் கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை நிலையங்களுக்கு பெறப்படும் என எதிர் எதிர்ப்பார்க்கப்படுகிறது. பெரம்பலூர் மாவட்ட உர விற்பனையாளர்கள் ஆதார் அட்டையுடன் வரும் விவசாயிகளுக்கு மட்டுமே உரம் விற்பனை செய்ய வேண்டும். இந்த உத்தரவை மீறிடும் உர விற்பனை நிலையங்கள் மீது உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985-ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மொத்த உர விற்பனையாளர்கள் வெளி மாவட்டங்களுக்கு உரங்களை மாற்றம் செய்திடவும், விற்பனை செய்திடவும் கூடாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் உர விற்பனையாளர்கள் உரங்களை வெளி மாவட்டங்களிலிருந்தும் கொள்முதல் செய்யக்கூடாது எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. விவசாயிகளின் தேவைக்கு மேல் அதிகமாகவும் உரம் வழங்கக்கூடாது.தேவையான உரங்களை மட்டுமே வழங்க வேண்டும். வேறு உரங்களை வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்த கூடாது. ஒரே நபருக்கு அதிக அளவு உரம் வழங்கக்கூடாது. குறிப்பிட்ட விவசாயிகளின் பெயரில் அதிகப்படியாக உர விற்பனை கண்டறியப்பட்டால் சில்லரை விற்பனை உரிமம் எந்த முன் அறிவிப்பும் இன்றி ரத்து செய்யப்படும். விவசாயம் மேற்கொள்ளாத நபர்களுக்கு உரம் விற்பனை செய்யக்கூடாது. திடீர் ஆய்வின் போது மேற்காணும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உர விற்பனையாளர்களின் விற்பனை உரிமம் உடனடியாக ரத்து செய்யப்பட்டு அவர்கள் மீது குற்ற வழக்குத் தொடரப்படும்.

விவசாயிகள் தாங்கள் உரம் வாங்க செல்லும்போது ஆதார் அட்டையுடன் சென்று உரம் வாங்கும்பொழுது உரிய பட்டியல் கேட்டு பெற வேண்டும். உர மூட்டையின் மேல் அச்சிடப்பட்ட அதிகபட்ச விற்பனை விலைக்கு மேல் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்த புகார்கள் இருப்பின் 94870 73705 (வேளாண்மை உதவி இயக்குநர் தரக்கட்டுப்பாடு, பெரம்பலூர்) மற்றும் 96777 99938 (வேளாண்மை அலுவலர் தரக்கட்டுப்பாடு, பெரம்பலூர்) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

எனவே, பெரம்பலூர் மாவட்ட உர விற்பனையாளர்கள் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985 மற்றும் உர நகர்வு கட்டுப்பாட்டு ஆணை 1973 ஆகியவற்றை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ச.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

Updated On: 7 Oct 2021 2:04 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  2. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  3. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  4. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  5. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு
  6. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவிக்கு, திருமண நாள் வாழ்த்துக்கள்!
  7. அண்ணா நகர்
    சென்னை ஐஐடி யில் மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பு சகோதரிக்கு வளைகாப்பு..!
  9. திருப்பரங்குன்றம்
    செல்போன் முன்பதிவு இல்லாத பயண சீட்டுகள் விற்பனை இரு மடங்காக
  10. லைஃப்ஸ்டைல்
    பொண்ணு மாப்பிள்ளையை வாழ்த்துவோம் வாங்க..!