/* */

பெரம்பலூர்: மழையால் 16 ஏரிகள் நிரம்பின - உபரி நீர் வெளியேற்றம்

பெரம்பலூர் மாவட்டத்தில், கனமழையால் 16 ஏரிகள் நிரம்பியுள்ளன; உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

பெரம்பலூர்: மழையால் 16 ஏரிகள் நிரம்பின - உபரி நீர் வெளியேற்றம்
X

கோப்பு படம்

பெரம்பலூர் மாவட்டத்தில், 73 ஏரிகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக தொடர்ந்து.மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் வேப்பந்தட்டை தாலுகாவில் உள்ள அரும்பாவூர் பெரிய ஏரி, சிறிய ஏரி, வெண்பாவூர், நூத்தாப்பூர், பாண்டகப்பாடி, அரசலூர் ஏரி, பெரம்பலூர் தாலுகாவில் உள்ள மேலப்புலியூர் அய்யலூர், குரும்பலூர், குன்னம் தாலுகாவில் உள்ள கீழப்பெரம்பலூர், வடக்கலூர், வடக்கலூர் அக்ரகாரம், ஒகளூர், கீரனூர், பெருமத்தூர், ஆலத்தூர் தாலுகாவில் உள்ள வரகுபாடி ஆகிய 16 ஏரிகளும் நிரம்பி வழிகின்றன.

நெற்குணம், பேரையூர், வயலூர், கிழுமத்தூர், அகரம்சிகூர், கைப்பெரம்பலூர், லாடபுரம் ஆகிய 9 ஏரிகளில் 81 சதவீதம் முதல், 90 சதவீதம் வரை நீர் நிரம்பி உள்ளன . பெரம்பலூர் சிறியஏரி, வெள்ளந்தாங்கி அம்மன் ஏரி, துறைமங்கலம் பெரியஏரி, வி.களத்தூரில் உள்ள சிறிய மற்றும் பெரிய ஏரிகள் உள்ளிட்ட 54 ஏரிகளில் 71 சதவீதம் முதல், 80 சதவீதம் வரை நீர் நிரம்பி உள்ளன. கைகளத்தூர், எழுமூர், ஆய்குடி, தழுதாழை, வெங்கலம், அன்னமங்கலம் ஆகிய 6 ஏரிகளும், 51 சதவீதம் முதல், 70 சதவீதம் வரை நிரம்பி உள்ளன. பெரம்பலூர் பெரியஏரி , சின்னாறு நீர்த்தேக்க பெரிய ஏரி உள்பட 15 ஏரிகளில், 26 சதவீதம் முதல் 50 சதவீதம் நீர் நிரம்பி உள்ளன.

அரணாரை நீலியம்மன் ஏரி, எசனை உள்பட 23 ஏரிகளில், 25 சதவீதத்திற்கு குறைவாக நீர் நிரம்பி உள்ளது. விசுவக்குடி அணையின் முழு கொள்ள்ளவான 26.74 அடியில், தற்போது 25.78 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. உபரிநீர் பிரதான மதகுவழியாக திறந்து விடப்படுகிறது. மருதையாற்றின் குறுக்கே, கொட்டரையில் கட்டப்பட்டுள்ள நீர்த்தேக்கத்தின் உயரம், 33.78 அடி ஆகும். இதில், முழு கொள்ளளவான ஏறத்தாழ 212.47 மில்லியன் கனஅடி நீர்தேங்கி உள்ளதால், பிரதான மதகுகள் வழியாக உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது .

Updated On: 11 Nov 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?