/* */

பெரம்பலூர் மாவட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 7,698 பேர் பயன்

பெரம்பலூர் மாவட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 7,698 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 7,698 பேர் பயன்
X

பைல் படம்.

பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுசுகாதாரத் துறை பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 500 க்கும் மேற்பட்டோர் மக்களை ஒருங்கிணைத்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வகையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தகுதி வாய்ந்த அனைவருக்கும் தடுப்பூசி அவரவர் தாம் வசிக்கும் பகுதிகளிலேயே எளிதில் கிடைத்திடும் வகையில் வாரந்தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் தமிழக அரசின் உத்தரவின்படி நடத்தப்பட்டு வருகிறது. இதர நாட்களிலும் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் 193 இடங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்டவர்கள், இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டு 84 நாட்கள் கடந்து விட்ட நிலையில் உள்ளவர்களுக்கும், பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தும் விதமாகவும் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 1,472 பேருக்கும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 1,525 பேருக்கும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 2,058 பேருக்கும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 2,643 பேருக்கும் என மொத்தம் 7,698 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கொரோனா தொற்றின் மூன்றாவது அலையில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ளவும், கொரோனா தொற்றில்லாத மாவட்டமாக நமது பெரம்பலூர் மாவட்டத்தை உருவாக்கவும், அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

Updated On: 29 Jan 2022 1:41 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்