/* */

தூய்மைப் பணியாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்ககோரி ஆட்சியரிடம் மனு

பெரம்பலூர் நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது

HIGHLIGHTS

தூய்மைப் பணியாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்ககோரி ஆட்சியரிடம் மனு
X

 தூய்மைப் பணியாளர்களுக்கு முறையான ஊதியம் கொடுக்காமலும், பிஎஃப் பண மோசடியை கண்டித்தும் தூய்மைப் பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

பெரம்பலூரில் இந்திய தொழிற்சங்க மையமான - சிஐடியு சார்பில், மாவட்ட துப்புறவு தொழிலாளர்கள் சங்கத்தினர், பெரம்பலூர் மாவட்டம் துப்புரவு தொழிலாளர் சங்கத்தின் நகரச் செயலாளர் கலைச்செல்வன் தலைமையில் துப்புரவு பணியாளர்கள் பலர் ஜூலை 5ம் தேதியான இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியாவிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

இதில் பெரம்பலூர் நகராட்சியில் நிரந்தரம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள், டேங்க் ஆப்ரேட்டர், எலெக்ட்ரிசியன் என மொத்தம் 325 பேர் பணிபுரிந்து வருகின்றனர், இதில் கொரோனோ தொற்று காலத்தில் கூட தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடைகள் மற்றும் சாதனங்கள் ஏதும் கொடுக்காமல் நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது,

மேலும் பணியாளர்களின் ஊதியத்தில் பிஎஃப் திட்டத்திற்காக மாதம் ரூபாய் 1350 பிடித்தம் செய்யப்பட்டு வருகின்றனர், ஆனால் இந்த தொகையை முறையாக உரியவரின் கணக்கில் நான்கு வருடங்களாக செலுத்தப்படாமல் இருந்து வருகின்றன, ஒவ்வொருமுறையும் இது குறித்து நகராட்சி ஆணையரிடம் தெரிவிக்கும்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இரண்டு மாதத்திற்குள் பணம் செலுத்தப்படும் என தெரிவித்து வந்தவர்,

8 மாத காலத்திற்கு மேல் கடந்துவிட்ட நிலையில்,பணம் தொழிலாளர் கணக்கில் வரவு வைக்கப்படாமல் உள்ளது, மேலும்கடந்த ஆண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் 523 ரூபாய் நிர்ணயம் செய்த தினக்கூலி தொகை அமல்படுத்தாமல் தொழிலாளர்களின் ஊதியத்தை சுரண்டபடுவதாக அறிகிறோம்,

எனவே பிடித்தம் செய்த தொகையை உரிய கணக்கில் செலுத்தி விடவும் ஒப்பந்த காலத்தில் பிடித்தம் செய்த தொகையை பிஎஃப் கணக்கில் அல்லது தொழிலாளர் வங்கி கணக்கில் செலுத்தவும் தினக்கூலியாக ரூபாய் 523, கடந்த ஏப்ரல் மாதம் முதல் நிலவை உடன் உள்ள தொகையை வழங்கிடவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம், என குறிப்பிடப்பட்டு இந்த மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்கள்,

இந்த மனு வழங்கும் நிகழ்வின்போது சங்கத்தின் தலைவர் ரமேஸ்,துணை தலைவர் பழனிசாமி,ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரங்கநாதன், ,நகராட்சி துப்புரவு தொழிலாளர் சங்க குழு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 6 July 2021 2:22 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?