நாமக்கல் மாவட்டத்தில் பிப். 19-ல் "உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்"

நாமக்கல் மாவட்டத்தில் பிப். 19-ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
X
நாமக்கல் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்’ பிப். 19-ஆம் தேதி நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்’ பிப்.19-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களுக்கு விரைவில் கிடைப்பதற்காக தொடங்கப்பட்டதே ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் ஆகும்.

அதன்படி, ஒட்டுமொத்த மாவட்ட நிா்வாகமும், ஒருநாள் வட்ட அளவில் தங்கியிருந்து கள ஆய்வு மேற்கொள்ள உள்ளனா். அரசு அலுவலகங்களை ஆய்வு செய்தும், மக்களின் குறைகளைக் கேட்டறிந்தும், நலத்திட்டங்களை வழங்கவும் உள்ளனா்.

இதற்கான முன்மனுக்களை வியாழக்கிழமை (பிப். 13) நாமக்கல், கீரம்பூா், நல்லிபாளையம், புதுச்சத்திரம், செல்லப்பம்பட்டி வருவாய் ஆய்வாளா் அலுவலகம் ஆகிய இடங்களில் உள்ள சிறப்பு அதிகாரிகளிடம் பொதுமக்கள் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story