1.5 வயது பெண் குழந்தை பாசன வாய்க்காலில் மூழ்கி உயிரிழந்தது

1.5 வயது பெண் குழந்தை பாசன வாய்க்காலில் மூழ்கி உயிரிழந்தது
X
வீட்டு அருகே பாசன வாய்க்காலில் குழந்தை உயிரிழந்தது - போலீசார் விசாரணை
உத்தர பிரதேச மாநிலம் மிா்சாபூா் மாவட்டத்தைச் சோ்ந்த அலிகஷன் - ருஸ்தாம்சா தம்பதியின் ஒன்றரை வயது மகள் ஆயிபாபானு சித்தோடு அருகே பாசன வாய்க்காலில் விழுந்து உயிரிழந்தார். நான்கு பெண் குழந்தைகளை உடைய இத்தம்பதி சித்தோட்டை அடுத்த நசியனூா் சாமிகவுண்டன்பாளையத்தில் தனியாா் ஆலையின் குடியிருப்பில் தங்கி வேலை செய்து வந்தனர்.
செவ்வாய்க்கிழமை இரவு வேலை முடிந்து வீடு திரும்பிய பெற்றோர், மூன்றாவது மகளான ஆயிபாபானுவை காணவில்லை. தேடிய போது வீட்டுக்கு அருகிலுள்ள கீழ்பவானி பாசன கிளை வாய்க்காலில் அவரது சடலம் மிதந்து கொண்டிருந்தது. விளையாடச் சென்ற குழந்தை வாய்க்காலில் தவறி விழுந்து மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இத்தகைய சோகமான சம்பவங்கள் பாசன வாய்க்கால்களை சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி நிகழ்வது கவலையளிக்கிறது. குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்பு வசதிகள் போதுமானதாக இல்லை. வாய்க்கால்களைச் சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைத்தல், எச்சரிக்கை பலகைகள் வைத்தல், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் அவசியமாகிறது. மேலும் தொழிற்சாலைகள் தங்கள் தொழிலாளர்களின் குடியிருப்புப் பகுதிகளில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகிறது.

Tags

Next Story