தலைவனாக விரும்பவில்லை, தொண்டனாகவே இருந்து தொடா்ந்து கட்சிக்குப் பாடுபடுவேன்! – கே.ஏ. செங்கோட்டையன்

தலைவனாக விரும்பவில்லை, தொண்டனாகவே  இருந்து தொடா்ந்து கட்சிக்குப் பாடுபடுவேன்! – கே.ஏ. செங்கோட்டையன்
X
தலைவனாக வேண்டும் என நான் எப்போதும் நினைத்ததில்லை, தொண்டனாக இருந்து தொடா்ந்து கட்சிக்குப் பாடுபடுவேன் என்று முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பேசினாா்.

ஈரோடு : ஈரோடு மாவட்டம், கோபி அருகே நல்லகவுண்டம்பாளையத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற எம்ஜிஆா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது:

எதிர்க்கட்சித் தலைவரின் கட்டளையின்படிதான் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. என்னை யாரும் சிக்கவைக்க முடியாது. என் அரசியல் வாழ்க்கையில் பல தலைவர்களைப் பார்த்துள்ளேன். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வகுத்துக்கொடுத்த பாதையில் நான் சென்று கொண்டிருக்கிறேன்.

எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படம் இல்லாததால் பாராட்டு விழாவில் கலந்துகொள்ளவில்லை எனக் கூறினேன். அதைப்பற்றி தற்போது நிறையப் பேசிக்கொண்டுள்ளனர். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை, அதற்கு நான் பதில் அளிக்கவும் முடியாது.

எத்தனையோ வாய்ப்புகள் வந்தபோதும், கட்சிக்காக பாடுபட்டவன், என்னை சோதிக்காதீர்கள். நான் தெளிவாக இருக்கிறேன், விட்டுகொடுக்கும் மனப்பான்மையுடன் இருக்கிறேன்.

எதிர்த் தரப்பு கருத்துகளுக்கு பதில் கூற முடியாது

எதிர்த் தரப்பில் இருந்து நிறைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதற்கு பதில் கூற முடியாது, சொன்னால் சிக்கலாகிவிடும். காவல் துறை பாதுகாப்பு நான் கேட்கவில்லை, அவர்களாகத்தான் கொடுத்தார்கள்.

43 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் நான் யாரையும் தவறாகப் பேசியதில்லை, கோபப்பட்டதும் இல்லை. ஜெயலலிதா கை அசைவுக்கு அர்த்தம் என்ன என்பது எனக்குத் தெரியும். பிறகு ஏன் அவர் என்னை ஒதுக்கிவைத்தார் என்று கேட்கலாம். அது வேறு, அதை சொன்னால் நிறைய பிரச்னை வரும்.

என்றைக்கும் நான் தொண்டன்தான்

நான் என்றைக்குமே என்னைத் தலைவன் என்று சொன்னது இல்லை. என்றைக்கும் நான் தொண்டன்தான். அதிலிருந்து நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தொண்டனாகவே இருந்து கட்சிக்காகத் தொடர்ந்து பாடுபடுவேன் என்றார்.

Tags

Next Story
வணிக நிறுவனங்களுக்கு தொழில் உரிமம் கட்டாயம்..!