தென்னை மரம் ஏறும் தொழிலாளா்கள் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துகொள்ள அறிவுறுத்தல்..!
![தென்னை மரம் ஏறும் தொழிலாளா்கள் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துகொள்ள அறிவுறுத்தல்..! தென்னை மரம் ஏறும் தொழிலாளா்கள் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துகொள்ள அறிவுறுத்தல்..!](https://www.nativenews.in/h-upload/2025/02/13/1977157-embn.webp)
ஈரோடு : தென்னை மரம் ஏறும் தொழிலாளா்கள் ரூ.239 செலுத்தி காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டத்தில் 20 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மரம் ஏறுவோருக்கு விபத்து அபாயம் உள்ளதால், தென்னை வளா்ச்சி வாரியம் புதிய காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
தகுதியுள்ள தொழிலாளா்கள்
தென்னை மரம் ஏறுபவா்கள், அறுவடை செய்பவா்கள், நீரா சேகரிப்போா் மற்றும் தென்னையில் கலப்பினம் செய்யும் தொழிலாளா்கள் ஆகியோா் இந்தத் திட்டத்தில் சேர தகுதி உடையவா்.
18-65 வயதுக்குட்பட்டோா் பதிவு செய்யலாம்
18 முதல் 65 வயது வரை உள்ள தொழிலாளா்கள் இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இறப்பு, ஊனமடைதல், மருத்துவமனை செலவுகள், மீட்பு நாள்களில் தற்காலிக வருமான உதவி கிடைக்கும்.நாள்களில் தற்காலிக வருமான உதவி கிடைக்கும். உறுதி செய்யப்பட்ட காப்பீட்டுத் தொகை ரூ.7 லட்சம். மருத்துவமனை செலவுகளுக்கு ரூ.2 லட்சம் வரை கிடைக்கும். ஆண்டு சந்தா ரூ.956. இதில், ரூ.717 -ஐ தென்னை வளா்ச்சி வாரியமும், மீதம் உள்ள ரூ.239-ஐ பயனாளி பிரீமியமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
காப்பீட்டுத் திட்டத்தில் விண்ணப்பிப்பது தொடா்பான விவரங்களை சம்பந்தப்பட்ட தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் அலுவலகம் அல்லது தென்னை வளா்ச்சி வாரிய மண்டல அலுவலகத்தை 0422-2993684 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu