கரும்பு பயிரில் கரிப்பூட்டை நோயைக் கட்டுப்படுத்த யோசனை - வேளாண் உதவி இயக்குனர் உமா மகேஸ்வரி

கரும்பு பயிரில் கரிப்பூட்டை நோயைக் கட்டுப்படுத்த யோசனை - வேளாண் உதவி இயக்குனர் உமா மகேஸ்வரி
X
கரும்பு பயிரில் கரிப்பூட்டை நோயை கட்டுப்படுத்தும் முறை குறித்து, நாமகிரிப்பேட்டை வேளாண் உதவி இயக்குனர் உமா மகேஸ்வரி யோசனை தெரிவித்துள்ளார்.

ராசிபுரம்: கரும்பு பயிரில் கரிப்பூட்டை நோயை கட்டுப்படுத்தும் முறை குறித்து, நாமகிரிப்பேட்டை வேளாண் உதவி இயக்குனர் உமா மகேஸ்வரி யோசனை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

கரிப்பூட்டை நோயின் அறிகுறிகள்

  • கரிப்பூட்டை நோய் பாதித்த கரும்புகள், வளர்ச்சி பகுதியில் சாட்டை வடிவம், 25 முதல், 150 செ.மீ., வரை காணப்படும்.
  • கருமை நிற பூஞ்சாண துகள்களை கொண்ட ஒளி ஊடுருவக்கூடிய வெள்ளி போன்ற சவ்வினால் இந்த சாட்டை சூழப்பட்டிருக்கும்.
  • ஆரம்பத்தில், கணுவிடைப்பகுதி நீண்டும், பின்பு கரும்பின் நீளமும் குன்றிவிடும்.
  • கட்டை கரும்பில் பக்க மொட்டுகள் அபரிமிதமாக முளைவிட ஆரம்பிக்கும்.அதன் இலைகள், குறுகலான செங்குத்தான தோகையாக உருவாகும்.

இதை கட்டுப்படுத்த துவரை பயிரை கரும்பு வரிசைகளுக்கு இடையே பயிரிடுவதால் இரண்டாம் நிலை பரவல் குறையும்.

காற்றேற்றப்பட்ட நீராவிட முறை மூலம், 50 செல்ஷியஸ் வெப்பத்தில், ஒரு மணி நேரம் அல்லது சுடுநீரில், 50 செல்ஷியஸ் வெப்பத்தில் அரை மணிநேரம் அல்லது 52 செல்ஷியஸ் வெப்பத்தில், 18 நிமிடங்களுக்கு கரும்பு விதைக்கரணையை நேர்த்தி செய்ய வேண்டும். கார்பன்டாசிம், 50 சதவீதம் யூரியா கரைசலில் 15 நிமிடம் கரணைகளை நேர்த்தி செய்ய வேண்டும்.

கரிப்பூட்டை நோய் தாக்கி, தாரை சாட்டையில் இருந்து பூசண வித்துக்கள் காற்றில் பறக்காமல் இருக்கும்படி ஒரு கோணி அல்லது பாலித்தீன் பை கொண்டு நுழைத்து, கரிச்சாட்டையை மட்டும் ஒடித்து பின் அத்துாரையும் பெயர்த்து சேர்த்து எரிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story