தை பூசத் திருவிழாவுக்கு பிள்ளையார் அழைப்பு..!
![தை பூசத் திருவிழாவுக்கு பிள்ளையார் அழைப்பு..! தை பூசத் திருவிழாவுக்கு பிள்ளையார் அழைப்பு..!](https://www.nativenews.in/h-upload/2025/02/10/1976868-vinayaga.webp)
தைமாதம் தமிழ்கடவுள் முருகனுக்கு உகந்த மாதமாக கருதப்பட்டு குன்றிலிருக்கும் குமரனுக்கு விழா எடுத்து மகிழ்வது தமிழர்களின் பழக்கம். முருகனின் பிறந்த நாளான தைபூசத்தை பால், பழம், பஞ்சாமிர்தம், இளநீர், பொங்கல், தேன், தினை மாவுகளை படைத்து முருகனின் பிறந்தநாளை கொண்டாடும் நிலா பிள்ளார் நிகழ்வுகள், காடச்சநல்லூர் கிராமம் களரங்காட்டில் மாறாத வழக்கமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இளம் சிறுமி பவிஷ்கா நிலா பெண்ணாக தேர்வு
வயதில் இளைய சிறுமி பவிஷ்கா இந்த ஆண்டு நிலா பெண்ணாக தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு மலர்கள் சூட்டி, பசுஞ்சாணியில் பிள்ளையார் பிடித்து, கொய்மலர்களை கொட்டி வானத்து நிலவொளியில் தை பூச நிகழ்வுக்கு பிள்ளையாரை அழைக்கும் ஐந்து நாள் நிகழ்ச்சி நடந்தது.
கிராமத்தின் பெருமையை விளக்கும் பாடல்களை பாடிய பெண்கள்
கிராமத்தின் மூத்த பெண்கள் கூடி நிலா பெண்ணை சுற்றி வந்து கிராமத்தின் பெருமையை பாரம்பரியத்தை விளக்கும் பாடல்களை பாடி, சுற்றி வந்து கைகளை கொட்டி கும்மியடித்து வழிபாடு செய்தனர்.
நிறைவு நாள் நிகழ்ச்சி - பிள்ளையாரை தைபூசத்தேருக்கு அனுப்பும் நிகழ்வு
ஐந்தாம் நாளான இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவில் பிள்ளையாரை தைபூசத்தேருக்கு அனுப்பும் நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்ச்சியில் கிராமத்து பெண்களும், சிறுமிகளும் பங்கேற்று வழிபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu