43 பயனாளிகளுக்கு ₹1.40 கோடி அரசு நலத்திட்ட உதவிகள்..!

43 பயனாளிகளுக்கு ₹1.40 கோடி அரசு நலத்திட்ட உதவிகள்..!
X
43 பயனாளிகளுக்கு ₹1.40 கோடி அரசு நலத்திட்ட உதவிகள்.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.

நாமக்கல் கொங்கு திருமண மண்படத்தில், புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. 9ம் நாள் நிகழ்ச்சிகள், நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் சுமன் தலைமையில் நடந்தது. மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ராஜேஸ்குமார் எம்பி, ராமலிங்கம் எம்எல்ஏ, மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் மதிவேந்தன் உரை

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், 43 பயனாளிகளுக்கு ₹1.40 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:

முத்தமிழ் அறிஞர் கலைஞர், திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில், அவர்களுக்கு திருநங்கை என்ற பெயரை சூட்டி பெருமை சேர்த்தார்.

புத்தக வாசிப்பின் அவசியம்

புத்தகங்கள் படிப்பதை அனைவரும் பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். புத்தகங்களை வாசிப்பதை தொடர் பழக்கமாக மாற்றி கொள்ள வேண்டும். புத்தகங்கள் வாசிப்பு நம்மை சிறந்த மனிதராகவும், சிறந்த சிந்தனையாளராகவும் மாற்றும்.

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

வருவாய்த்துறை சார்பில் 9 திருநங்கைகளுக்கு ₹9லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்கள் உள்பட மொத்தம் 43 பயனாளிகளுக்கு ₹1.40 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை அமைச்சர் மதிவேந்தன், எம்பிக்கள் திருச்சி சிவா, ராஜேஸ்குமார், எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் பார்வையிட்டனர்.

சமூக வலைதளங்களின் ஆதிக்கம்

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ராஜேஸ்குமார் எம்பி பேசியதாவது:

புத்தக திருவிழா நடத்துவதன் நோக்கம், புத்தகம் படிக்கும் பழக்கத்தை மேம்படுத்துவதற்காகவே.

தமிழ்நாடு முதலமைச்சரின் அரசாணைப்படி, 3வது ஆண்டாக நாமக்கல் மாவட்டத்தில் புத்தக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது சமூக வலைதளங்கள், இணையதளம் மூலம் செய்திகள், அறிஞர்களின் கருத்துகளை நாம் தெரிந்து கொள்கிறோம்.

சமூக வலைதளங்களின் ஆதிக்கம் அதிகரித்ததால் புத்தக வாசிப்பு பழக்கம் குறைந்துவிட்டது.

எளிதாக கிடைப்பதை நோக்கி மனிதர்கள் செல்வது தற்போது அதிகரித்துவிட்டது.

புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை, அனைவரும் வளர்த்து கொள்ள வேண்டும்.

விழாவில், பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள், திருநங்கைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story