நாமக்கல் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்
ராசிபுரத்தில் நடைபெற்ற, நாமக்கல் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் அருண் பேசினார்.
நாமக்கல் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க 27வது பொதுக்குழு கூட்டம், ராசிபுரம் ரோட்டரி ஹாலில் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மாவட்ட கவுரவத் தலைவர் குழந்தான் முன்னிலை வகித்தார்.
மாவட்ட செயலாளர் கணேசன் வரவேற்றார். ராசிபுரம் தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் மாலா குத்துவிளக்கேற்றி, நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் அருண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுகாதாரமான, பாதுகாப்பான உணவு தயாரிப்பு முறைகளை கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்தும், சட்ட விதிமுறைகள் மற்றும் அவற்றை கடைபிடிப்பதன் அவசியம் குறித்தும் பேசினார்.
மேலும் உணவுப் பாதுகாப்புத்துறை தொடர்புடைய உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். முன்னதாக, பொதுக்குழுக் கூட்டத்தில் 2022-23ஆம் ஆண்டிற்குரிய தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் நளா சுரேஷ் சமர்ப்பித்தார். கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் தியாகராஜன், உணவுப் பாதுகாப்பு துறை அலுவலர் முருகன், ராசிபுரம் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் முரளி, திருமூர்த்தி ரவி, கே.குணசேகர், பிரகாஷ், கோபு, பிரபு மற்றும் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, வெப்படை , பரமத்தி வேலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த திரளான ஹோட்டல் உரிமையாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu