தொழிலாளி வீட்டில் 6 பவுன் நகை திருட்டு..!

X
தொழிலாளி வீட்டில் 6 பவுன் நகை திருட்டு.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.

பள்ளிபாளையம், ஜன.23:

பள்ளிபாளையம் அடுத்துள்ள ஓடப்பள்ளியை சேர்ந்தவர் கண்ணன் (38). இவர் இங்குள்ள பொன்னி சர்க்கரை ஆலையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு மனைவி குழந்தைகளுடன் குலதெய்வ கோயிலுக்கு சென்றார்.

திருட்டு நடந்த நேரம்

பிற்பகல் 3 மணியளவில், கண்ணன் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருந்தது.தங்க நகைகள் 6 பவுன் திருடப்பட்டது.

புகார் அளிப்பு

இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்க்கையில், பீரோவின் லாக்கரை உடைத்து 6 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து பள்ளிபாளையம் போலீசில் கண்ணன் புகார் அளித்தார்.

போலீசார் விசாரணை

இதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நகையை திருடிச்சென்ற நபரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
பொங்கல் பண்டிகை முடிவில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.30..!