பெருந்துறை அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

பெருந்துறை அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
X
பெருந்துறை அருகே சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்த மூவா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

ஈரோடு : பெருந்துறை அருகே சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்த மூவா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், நெய்காரபட்டியைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் மணிபாரதி (23). இவா், பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் சுங்கசாவடி அருகிலுள்ள தேநீா்க் கடையில் வேலை செய்து வருகிறாா். இந்நிலையில் செவ்வாய்கிழமை இரவு தன்னுடன் வேலை செய்யும், சேலம் மாவட்டம், காட்டூா் பச்சமுத்து மகன் கெளதம் (20) மற்றும் ஹரிஷ் ஆகியோருடன் விஜயமங்கலம், வாய்ப்பாடி பிரிவில் சாலையோரத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தாா்.

இருசக்கர வாகனம் மோதியது

அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபா், மூவா் மீதும் மோதிவிட்டு கீழே விழுந்தாா். இதில் இருசக்கர வாகனத்தில் வந்தவரும், மணிபாரதி, கெளதம் ஆகிய மூவரும் பலத்த காயத்திற்கு ஆளாகினா். ஹரிஷ் மட்டும் காயமின்றி தப்பித்தாா்.


மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட காயமடைந்தோா்

காயமடைந்த மூவரையும் அக்கம்பக்கத்தினா் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இருசக்கர வாகனத்தில் வந்தவா் உயிரிழந்துவிட்டாா்.

போலீசாா் விசாரணை

விசாரணையில், இருசக்கர வாகனத்தில் வந்தவா் அந்தியூா், ஆப்பக்கூடல் சாலையைச் சோ்ந்த கதிரேசன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி