Medical Insurance Card Special Camp மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கும் சிறப்புமுகாம்: ராஜேஷ்குமார் எம்.பி., துவக்கம்
முள்ளுக்குறிச்சியில் நடைபெற்ற சிறப்பு முகாமில், மருத்துவ காப்பீட்டு அட்டைக்கான உத்தரவுகளை, ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் வழங்கினார். அருகில் மாவட்ட ஆட்சியர் உமா.
Medical Insurance Card Special Camp
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா, முள்ளுக்குறிச்சி, அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் பதிவு சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, 16 பேருக்கு மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்திற்கான அடையாள அட்டைகளை வழங்கிப் பேசியதாவது:
முன்னாள் முதல்வர் கருணாநிதி, இந்தியாவில் முதல் முறையாக உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், கடந்த 2008 ஆம் ஆண்டு கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை கொண்டு வந்தார். அவர் கொண்டு வந்த இந்த மகத்தான திட்டத்தினை தற்போது மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தி வருகிறது. கருணாநிதியின் வழியில் செயல்படும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், மகளிர் இலவச பஸ் பயணம், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார். மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட தொழில் படிப்புகள் பயில 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை செயல்படுத்தி ஏழை எளிய மாணவ, மாணவியர்களுக்கு உயர்கல்வி பயில வழி வகுத்துள்ளார் என கூறினார்.
தொடர்ந்து, ராசிபுரம் தாலுகா, முள்ளுக்குறிச்சி, அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின், விலையில்லா மிதிவண்டிகளை ராஜேஸ்குமார் எம்.பி. வழங்கிõனர்.
நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏராமசுவாமி, தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்ட மேலாளர் மணிமொழி, மாவட்ட மருத்துவ காப்பீட்டு திட்ட மேலாளர் சுரேஷ்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu