ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முதியோருக்கான தபால் வாக்கு சேவை – வாக்குப்பதிவு தொடக்கம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்கு பெறும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தபால் வாக்கு பதிவு தொடங்கியது

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்கு பெறும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

ஈரோடு வீரப்பன்சத்திரம், ஆண்டவர் தெருவில் முதியவர் தபால் வாக்குப் பதிவு

பிப்ரவரி 5-ஆம் தேதி இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்களில் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 2,526 பேர் உள்ளனர். இவர்களில் 209 பேரும், மாற்றுத்திறன் வாக்காளர்களில் 47 பேரும் வீட்டிலிருந்தவாறே தங்களது வாக்குகளை தபால் மூலம் செலுத்த விருப்பம் தெரிவித்திருந்தனர்.

வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் நடவடிக்கை

இதற்காக இத்தொகுதிக்குள்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் கடந்த 15-ஆம் தேதிக்கு முன்பாகவே முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடம் இருந்து அவர்கள் தபால் வாக்குகளை செலுத்துவதற்கான படிவம் (12 டி) வழங்கி ஒப்புதல் பெற்றிருந்தனர்.

தபால் வாக்கு பெறும் பணி தொடங்கியது

இதையடுத்து, முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்கு பெறும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் வீடுகளுக்கு 4 குழுக்களாகச் சென்று தபால் வாக்குகள் பெறப்பட்டன.

தபால் வாக்குப் பணியில் ஈடுபட்ட குழுக்கள்

இதில், ஒவ்வொரு குழுவிலும் ஒரு தேர்தல் நுண் பார்வையாளர், வாக்குச் சாவடி அலுவலர்கள் 2 பேர், ஒரு விடியோகிராபர், துப்பாக்கி ஏந்திய காவலர் ஒருவர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

தபால் வாக்குப் பணி நடைபெற்ற பகுதிகள்

இந்தக் குழுவினர் ஈரோடு கருங்கல்பாளையம், கோட்டை, வீரப்பன்சத்திரம், கைக்கோளன் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஏற்கெனவே ஒப்புதல் அளித்த முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து தபால் வாக்குகளைப் பெறும் பணியில் ஈடுபட்டனர்.

தபால் வாக்கு பணியின் விதிமுறைகள்

அப்போது, வாக்காளரின் அடையாளத்தை சரிபார்த்து, அதன் விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து, வாக்காளரின் கையொப்பத்தை பெற்று வாக்களிக்கும் முறை குறித்து விளக்கி, அஞ்சல் வாக்குச்சீட்டை வழங்கினர். அவர்கள் வாக்களித்த பின்னர் வாக்குச் சீட்டுகளைப் பெட்டியில் பெற்றுக்கொண்டனர்.

தபால் வாக்கு பதிவு நடைபெறும் தேதிகள்

இந்தப் பணி தொடர்ந்து 24, 25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில், வாக்காளர் கண்பார்வையற்றவராகவோ அல்லது உடல்நலிவு காரணமாக வாக்களிக்க இயலாத நிலையில் இருந்தாலோ அவரது சார்பில் கட்சி சார்பற்ற வயது வந்த ஒருவரிடம் வாக்களிப்பு குறித்து ரகசிய காப்பு உறுதிமொழி பெற்றுக்கொண்டு அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது.

வாக்காளர் வீட்டில் இல்லாதபோது பின்பற்றப்படும் நடைமுறை

வாக்குச் சாவடி நிலை அலுவலர் குழுவினர், வாக்காளர்களின் வீட்டுக்கு முதல் முறையாகச் செல்லும்போது, வாக்காளர் அங்கு இல்லையெனில் இரண்டாவது முறையாக எப்போது வருவோம் என்பது குறித்து தகவல் தெரிவிப்பார்கள். இரண்டாவது முறையாக வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளரின் தபால் வாக்குப் பதிவைப் பெற வரும்போதும் வாக்காளர் வீட்டில் இல்லையென்றால் அதன்பின் வாக்குகள் பெற வரமாட்டார்கள்.

மாற்றுத்திறனாளிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்

மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை மாற்றுத்திறனாளிதான் என்பதற்கான அரசு சான்றிதழ் நகலை வாக்குச் சாவடி நிலைக் குழுவினரிடம் காண்பித்து உறுதிசெய்ய வேண்டும்.

தொடர்புக் கொள்ள தொலைபேசி எண் அறிவிப்பு

மேலும், இதுதொடர்பான சந்தேகங்களுக்கு 0424-2251617 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story