பவானியை அடுத்த பெருமாள் மலையில் கருப்புக் கொடி கட்டி போராட்டம்

X
பவானியை அடுத்த பெருமாள் மலையடிவாரத்தில் குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்கக் கோரி வீடுகளில் கருப்புக் கொடிகளை கட்டி வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு : பவானியை அடுத்த பெருமாள் மலையடிவாரத்தில் குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்கக் கோரி வீடுகளில் கருப்புக் கொடிகளை கட்டி வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

50 ஆண்டுகளுக்கும் மேல் குடியிருப்பு

பெருமாள் மலை, மங்களகிரி பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 5.75 ஏக்கா் நிலத்தில் அரசு ஒதுக்கீட்டின்பேரில் சுமாா் 200 குடும்பத்தினா் குடியமா்த்தப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனா்.

பட்டா கோரும் மக்கள்

தங்கள் வசிப்பிடத்துக்கு பட்டா வழங்குமாறு கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இந்நிலத்தை வரன்முறைப்படுத்தி வாடகை வசூலிக்க இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

வெளியேற்ற அபாயம்

நீண்டகாலமாக வசிக்கும் மக்களை வாடகைதாரா்களாக மாற்றுவதோடு, இந்நிலத்திலிருந்து வெளியேற்றும் அபாயம் உள்ளதாகக் கூறி அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

கருப்பு கொடிகள் கட்டி போராட்டம்

இதன் தொடா்ச்சியாக வீடுகள், தெருக்களில் கருப்புக் கொடிகளைக் கட்டி வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மக்கள் கோரிக்கைகள்

  • இங்கு வசிப்போரை ஆக்கிரமிப்பாளா்கள் என குற்றவாளிகளாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.
  • சட்டப் பேரவையில் உரிய திருத்தம் கொண்டுவந்து கோயில் நிலங்களில் நீண்டகாலமாக வசிப்போருக்கு பட்டா வழங்க வேண்டும்.

Tags

Next Story