ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : கண்காணிப்பு குழுவினர் ரூ. 1.50 கோடி பறிமுதல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் போது, நிலைக் கண்காணிப்பு குழுவினர் அக்ரஹாரம் சோதனைச் சாவடி அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஏ.டி.எம்களில் பணம் நிரப்பும் டெம்போ டிராவலர் சிறிய வாகனத்தை சோதனையிட்டனர்.
வாகனத்தில் 1.50 கோடி ரூபாய் இருந்தது. ஆனால், 40 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே ஆவணங்கள் உள்ளன. மீதமுள்ள 1.10 கோடி ரூபாய்க்கு ஆவணங்கள் இல்லாததால், 1.50 கோடி ரூபாயுடன் வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.
கருவூலத்தில் செலுத்தப்பட்ட பணம்
ஈரோடு காளைமாட்டுச் சிலை அருகே, நிலைக் கண்காணிப்புக் குழுவின் தலைமையில் அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, மதுரையிலிருந்து வந்த 'டாடா அல்ட்ராஸ்' காரில் வந்த மதுரையைச் சேர்ந்த நரசிம்மகுமாரிடம் 4 லட்சம் ரூபாய் இருந்தது. உரிய ஆவணம் இல்லாததால், பணத்தைப் பறிமுதல் செய்து கருவூலத்தில் செலுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu