போலீஸ் பாதுகாப்பு கேட்டு சுயேட்சை வேட்பாளர் மனு!

X
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், கோவையை சேர்ந்த நூர் முகம்மது, சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், கோவையை சேர்ந்த நூர் முகம்மது, சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்திடம், நேற்று மனு வழங்கினார்.

உயிருக்கு ஆபத்து ஏற்படவாய்ப்பு

மனுவில், 'எனக்கு பல்வேறு மர்ம நபர்களிடமிருந்து அச்சுறுத்தல் வருகிறது. இதனால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படவாய்ப்புள்ளது. எனக்கு உடனடியாக ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்' என, கூறியுள்ளார்.

பிரசாரம் மேற்கொள்ள முடியவில்லை

அச்சுறுத்தலால் தற்போது வரை பிரசாரம் மேற்கொள்ள இயலாத நிலை தொடர்வதாக, நூர் முகம்மது தெரிவித்துள்ளார்.கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் சுயேட்சை வேட்பாளரின் மனுவை ஏற்க எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியவர்களில் நூர் முகம்மதும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story