நாமக்கல்: கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் உண்ணாவிரதம்

X
கூட்டப்பள்ளி பேருந்து நிறுத்தத்தின் அருகே கூட்டப்பள்ளி காலனி அய்யகவுண்டன் பாளையம், கூட்டப்பள்ளி குடித்தெரு, நாச்சிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் : திருச்செங்கோடு கூட்டப்பள்ளி காலனியில் 4500 க்கும் மேற்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் உள்ளன. இங்கு 33 ஏக்கர் பரப்பளவில் கூட்டப்பள்ளி ஏரி இருந்தது. அது சுருங்கி தற்போது கழிவுநீர் ஓடையாக மாறிவிட்டது. இந்நிலையில் கூட்டப்பள்ளி காலனி குடியிருப்பின் அருகே ஏரிக்கரை அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் சுமார் 36 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட உள்ளதாக நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.

மக்கள் எதிர்ப்பு

  • இதனை அடுத்து கூட்டப்பள்ளி பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல் கட்டமாக திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • இரண்டாம் கட்டமாக வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
  • இதனைத் தொடர்ந்து மூன்றாம் கட்டமாக இன்று கூட்டப்பள்ளி பேருந்து நிறுத்தத்தின் அருகே கூட்டப்பள்ளி காலனி அய்யகவுண்டன் பாளையம், கூட்டப்பள்ளி குடித்தெரு, நாச்சிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story