சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்..!

சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்..!
X
சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.

எருமப்பட்டி ஒன்றியம், பொம்மசமுத்திரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் மற்றும் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் சார்பில், சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மண்டல துணை பிடிஓ தங்கராஜ் தலைமை வகித்தார். ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் நடைபெற்ற பணிகள், அவற்றில் உள்ள குறைகள், நிறைகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

பிரதமர் வீடு வழங்கும் திட்டம்

அதேபோல், பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளில் குறைகளை குறித்து பயனாளிகளிடம் கேட்கப்பட்டது.

100 நாள் வேலை திட்டம்

மேலும், 100 நாள் வேலை திட்டத்தில் புதிய பணிகளை மேற்கொள்வது குறித்தும், எந்தெந்த பணிகளை எடுத்துக் கொள்வது குறித்தும் கருத்து கேட்கப்பட்டது.

கூட்டத்தில் பங்கேற்றவர்கள்

கூட்டத்தில் வட்டார வள அலுவலர் சங்கர், ஊராட்சி செயலாளர் மூர்த்தி, 100 நாள் பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு சுமைப்பணி தொழிலாளா்கள்