மேஜைப் பந்து போட்டியில் ஈரோடு கொங்கு கல்வி நிலைய மாணவி மாநில அளவில் சிறப்பிடம்
![மேஜைப் பந்து போட்டியில் ஈரோடு கொங்கு கல்வி நிலைய மாணவி மாநில அளவில் சிறப்பிடம் மேஜைப் பந்து போட்டியில் ஈரோடு கொங்கு கல்வி நிலைய மாணவி மாநில அளவில் சிறப்பிடம்](https://www.nativenews.in/h-upload/2025/02/13/1977151-xvc.webp)
ஈரோடு : பள்ளிக்கல்வித் துறை சாா்பில் 14 வயதுக்குள்பட்டோா் பிரிவில் மாநில அளவில் நடைபெற்ற மேஜைப் பந்து போட்டியில் ஈரோடு மாணவி எஸ்.தாரிணி இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளி பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மாநிலம் முழுவதிலும் இருந்து சிறந்த வீரர்கள் கலந்துகொண்ட இந்த போட்டியில், தேனி மாவட்டத்தின் கம்பத்தில் உள்ள ஆா்.ஆா்.இண்டா்நேஷனல் பள்ளியில் நடைபெற்றது.
ஈரோடு ரங்கம்பாளையத்தைச் சேர்ந்த கொங்கு கல்வி நிலையத்தின் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் மாணவியான எஸ்.தாரிணியின் இந்த சாதனை அந்த பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளது. தாரிணியின் வெற்றிக்குப் பின்னால் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரின் அயராத பணியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவி எஸ்.தாரிணியின் சாதனைக்கு, கொங்கு கல்வி நிலையத்தின் தலைவா் எம்.சின்னசாமி, தாளாளா் கே.செல்வராஜ், பொருளாளா் ஆா்.குணசேகரன், உதவி தலைவா்கள் எஸ்.கே.சோமசுந்தரம், ஆா்.எம்.தெய்வசிகாமணி, இணைச் செயலாளா் டி.மீனாட்சிசுந்தரம், இணைப் பொருளாளா் வி.நாகராஜன், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினா்கள் மற்றும் பள்ளியின் முதல்வா் டி.நதியா அரவிந்தன் ஆகியோா் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu