பெருந்துறை : நின்று கொண்டிருந்த லாரி மீது மோதிய தனியார் பிஸ்கட் தயாரிப்பு நிறுவன பேருந்து - 19 பேர் காயம்

பெருந்துறை : நின்று கொண்டிருந்த லாரி மீது மோதிய தனியார் பிஸ்கட் தயாரிப்பு நிறுவன பேருந்து - 19 பேர் காயம்
X
பிஸ்கட் கம்பெனியின் பேருந்து, எதிர்பாராத விதமாக லாரியின் பின் பக்கம் மோதியது. இதில் பேருந்தில் இருந்த 19 பேர் லேசான காயம் அடைந்தனர்.

ஈரோடு : பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள ஒரு தனியார் பிஸ்கட் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் தினமும் கம்பெனி பேருந்தில் பணிக்கு வருகின்றனர். இந்த பேருந்து அம்மாபேட்டை, பவானி, லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 30 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு பெருந்துறை நோக்கி பயணித்தது.

விபத்து நடந்த விதம்

மேட்டூரை சேர்ந்த நெல்சன் டேவிட் (34) என்பவர் பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்தார். பெருந்துறை அருகே உள்ள காஞ்சிகோவில் பிரிவு சாலையில் பேருந்து சென்றபோது, சாலையோரத்தில் நின்றிருந்த லாரியின் பின்புறத்தில் மோதியது. லாரியில் இருந்து தொழிலாளர்கள் சிமெண்ட் இறக்கிக் கொண்டிருந்த நேரத்தில் இந்த விபத்து நடந்தது.

விபத்தில் பேருந்தில் இருந்த 19 பேர் காயமடைந்தனர். இதில் பேருந்து ஓட்டுநர் நெல்சன் டேவிட்டுக்கு கால் முறிவு ஏற்பட்டது. மற்றவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.

காயமடைந்தவர்கள் அனைவரும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதிக காயம் இல்லாதவர்கள் சிகிச்சை முடிந்ததும் உடனே வீடு திரும்பினர்.

விபத்து குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்து ஓட்டுநரின் தூக்க கலக்கமே விபத்துக்கு காரணம் என்று கருதப்படுகிறது.

Tags

Next Story
வணிக நிறுவனங்களுக்கு தொழில் உரிமம் கட்டாயம்..!