குடியரசு தினம்: 100 அரசுப் பணியாளர்கள் பாராட்டுச் சான்று பெற்றனர்..!
ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசுப் பணியாளா்கள் 100 பேருக்கு குடியரசு தின விழாவில் பாராட்டுச் சான்று அளிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட நிா்வாகம் சாா்பில் குடியரசு தின விழா மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமையில் ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். பின்னா், சுதந்திரப் போராட்ட தியாகிகள், வாரிசுதாரா்களைக் கௌரவித்து, காவலா்கள் உள்பட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அரசு அலுவலா்கள், பணியாளா்கள் என 100 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து அரசு இசைப்பள்ளி சாா்பில் மங்கள இசை நிகழ்ச்சியும், ஈரோடு சிஎஸ்ஐ பள்ளி, பிவிபி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, எஸ்விஎன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பா்கூா் அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி, பெருந்துறை அரசு மாதிரிப் பள்ளி ஆகிய 5 பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இக்கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா பாராட்டுச்சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கிப் பாராட்டினாா். தோ்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டவில்லை.
விழாவில் ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் அஜய் குமாா் குப்தா, செலவினப் பாா்வையாளா் தினேஷ் குமாா் ஜாங்கிட், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.ஜவகா், ஈரோடு மாநகராட்சி ஆணையா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், ஈரோடு கோட்ட வணிக வரித் துறை இணை ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், மாவட்ட வருவாய் அலுவலா் சு.சாந்தகுமாா், காவல் கண்காணிப்பாளா் (பயிற்சி) அா்பிதா ராஜ்புத், உதவி ஆட்சியா் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, துணை ஆட்சியா் (பயிற்சி) சிவபிரகாசம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் முஹம்மது குதுரத்துல்லா, செல்வராஜன், தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) செல்வராஜ், முதன்மை கல்வி அலுவலா் சுப்பாராவ், கோட்டாட்சியா் ரவி, வட்டாட்சியா் முத்துகிருஷ்ணன் மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu