குடியரசு தின லீவை மறுக்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை..!
X
By - charumathir |27 Jan 2025 5:57 PM IST
குடியரசு தின லீவை மறுக்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.
ஈரோடு:
குடியரசு தினமான நேற்று ஈரோடு தொழிலாளர் துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயலட்சுமி தலைமையில் துணை உதவி ஆய்வாளர்கள் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.
ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபி, சத்தி பகுதிகளில், 105 கடை, உணவகங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களில் ஆய்வு நடந்தது. இதில், 90 நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமலும், மாற்று விடுப்பு வழங்காமலும் பணியில் அமர்த்தியது தெரியவந்தது. 90 நிறுவன உரிமையாளர் மீது தொழிலாளர் துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu