ஈரோட்டில் அரசு கேபிள் 'டிவி' இணைப்பை துண்டித்தவர் கைது..!

ஈரோட்டில் அரசு கேபிள் டிவி இணைப்பை துண்டித்தவர் கைது..!
X
ஈரோட்டில் அரசு கேபிள் 'டிவி' இணைப்பை துண்டித்தவர் கைது.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.

ஈரோடு:

ஈரோடு மாநகரில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் அரசு கேபிள் 'டிவி' சிக்னல் இணைப்பை தொடர்ச்சியாக துண்டிக்கப்பட்டு வந்தது.இதுகுறித்து ஆப்பரேட்டர்கள், அரசு கேபிள் 'டிவி' நிறுவன தனி தாசில்தாரிடம் புகாரளித்தனர். தாசில்தார் தாமோதரன் ஆய்வு செய்ததில் 2 கி.மீ துாரத்திற்கு ஒயர் துண்டிக்கப்பட்டிருப்பதும் ,10 ஆயிரம் இணைப்புகள் பாதிக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது. இதுகுறித்து சூரம்பட்டி போலீசில் புகாரளித்தார். விசாரணை நடத்திய போலீசார் ஈரோடு நாடார் மேடு, நேரு வீதியை சேர்ந்த பரஞ்ஜோதி, 45 என்பவரை கைது செய்தனர். கேபிள் 'டிவி' ஆப்பரேட்டர் சம்பள பாக்கி வைத்திருந்ததால் ஒயரை துண்டித்ததை ஒப்புக்கொண்டார்.

Tags

Next Story
மகளிர் உரிமைத்தொகை கிடைக்காமல் விடுபட்டவர்களுக்கு விரைவில் உரிமைத்தொகை; அமைச்சர் உறுதி..!