ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு பதிவு பூத் சிலிப் விநியோகப் பணி தொடக்கம்..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு பதிவு பூத் சிலிப் விநியோகப் பணி தொடக்கம்..!
X
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கியது .அதை பற்றி இப்பதிவில் காணலாம்.

ஈரோடு:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்காக ஈரோடு கிழக்கு தொகுதியில் 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதில் 9 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க, நாம் தமிழர் கட்சி, சுயேட்சைகள் என 46 பேர் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் பணிகள்

தேர்தலையொட்டி மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா தலைமையில் கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த் மற்றும் அலுவலர்கள் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

வாக்குச்சாவடிகளை பயன்படுத்தும் பணி.

அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு மற்றும் பயிற்சி.

பூத் சிலிப் வழங்கும் பணி

வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. இப்பணியை மாநகராட்சி ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு வார்டிலும் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களது வாக்காளர் அடையாள அட்டையை பரிசோதித்து, அவர்கள் வாக்களிக்கும் போது எடுத்துச் செல்ல வேண்டிய பூத் சிலிப்பை வழங்கி வருகின்றனர்.

அலுவலர்களுக்கான பயிற்சி

ஈரோடு கிழக்கு தொகுதியில் 237 வாக்குச்சாவடிகளுடன் கூடுதலாக 20 சதவீதம் வாக்குச்சாவடிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இங்கு 1,194 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர்.

19-ந்தேதி முதற்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இன்று 2-ம் கட்ட பயிற்சி ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள ஆர்.ஏ.என்.எம் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் மண்டல அலுவலர்கள் பயிற்சி அளித்தனர்.

வருகிற 3-ம் தேதி இறுதிக்கட்ட பயிற்சி நடைபெற உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு தபால் ஓட்டு போட நடவடிக்கை எடுக்கப்பட்டு, எந்த வாக்குச்சாவடியில் பணியாற்ற வேண்டும் என ஆணை வழங்கப்படும்.

Tags

Next Story
மகளிர் உரிமைத்தொகை கிடைக்காமல் விடுபட்டவர்களுக்கு விரைவில் உரிமைத்தொகை; அமைச்சர் உறுதி..!