நாமக்கல்: ரூ. 2 கோடி மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை

நாமக்கல்: ரூ. 2 கோடி மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை
X
நாமக்கல் மாவட்டம் எலச்சிப்பாளையம் கிழக்கு ஒன்றியம், கொன்னையார் ஊராட்சி, சந்தைப்பேட்டை முதல் ஆயித்தாகுட்டை சாலை வரை ரூ. 2 கோடி 2,50,000 மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் எலச்சிப்பாளையம் கிழக்கு ஒன்றியம், கொன்னையார் ஊராட்சி, சந்தைப்பேட்டை முதல் ஆயித்தாகுட்டை சாலை வரை ரூ. 2 கோடி 2,50,000 மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் கலந்து கொண்டு பணிகளை தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் ஒன்றிய திமுக செயலாளர் தங்கவேல், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பாலசுப்பிரமணியம், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் முருகானந்தம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சந்தைப்பேட்டை முதல் ஆயித்தாகுட்டை சாலை வரை தரமான தார் சாலையை அமைப்பது பயணிகளுக்கு மிகுந்த வசதியை ஏற்படுத்தும். இது பேருந்து மற்றும் சரக்கு வாகனங்களின் போக்குவரத்தை விரைவுபடுத்தும். வியாபாரம் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கும் ஊக்கமளிக்கும்.

Tags

Next Story