/* */

நாகையில் மீனவர்கள் தேர்தல் புறக்கணிப்பு

நாகையில் மீனவர்கள் தேர்தல் புறக்கணிப்பு
X

நாகப்பட்டினத்தில் தூண்டில் வளைவு துறைமுகம் அமைத்து தராததை கண்டித்து சாமந்தான்பேட்டை கிராம மீனவர்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக அறிவித்துள்ளனர்.

நாகப்பட்டினத்தை அடுத்த சாமந்தான்பேட்டையில் தூண்டில் வளைவுடன் கூடிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்தார். அந்த அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டதன் காரணமாக சாமந்தான்பேட்டை கிராம மீனவர்கள் தூண்டில் வளைவு மீன்பிடித் துறைமுகம் அமைக்க கோரி டிசம்பர் மாதம் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து கோரிக்கை நிறைவேற்றித் தரப்படும் என அரசு அறிவித்ததைத் தொடர்ந்து மீனவர்களின் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது.

இதனிடையே இதற்கான எந்தவித பணிகளும் துவங்காததால், அதிருப்தி அடைந்த சாமந்தான்பேட்டை கிராம மீனவர்கள், தூண்டில் வளைவு மீன்பிடி துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்காததாக அரசை கண்டித்து இன்று தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். தங்களது எதிர்ப்பை அரசுக்கு தெரிவிக்கும் விதமாக கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்துள்ள மீனவர்கள், தங்களது கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், மீன்வளத்துறை அமைச்சரும் செவிமடுத்து கேட்காமல் தங்களை புறந்தள்ளி உள்ளதாக குற்றம் சாட்டியுள்ள மீனவர்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க போவதில்லை எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 13 March 2021 11:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  2. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  5. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  7. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  8. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  9. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  10. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்