/* */

வருமானவரி அதிகாரிகளாக நடித்து ரூ. 45 லட்சம் அபகரிப்பு

வருமானவரி அதிகாரிகளாக நடித்து ரூ. 45 லட்சம் அபகரிப்பு
X

நாகப்பட்டினத்தில் ஓய்வு பெற்ற நடத்துநரிடம் வருமான வரித்துறை அதிகாரிகளை போல நடித்து 45 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 60 பவுன் நகைகள் அபகரிக்கப்பட்ட சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நாகப்பட்டினத்தை அடுத்துள்ள பால்பண்ணைசேரி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் பணி ஓய்வு பெற்ற நடத்துநர் சுப்ரமணியன். இவர் அதே பகுதியில் உள்ள விநாயகர் கோவிலை பராமரித்து வந்துள்ளார். அப்பொழுது தினமும் கோவிலுக்கு வரும் நாகை ஆண்டோ சிட்டி பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் அவரது மகள் ராஜேஸ்வரி ஆகியோர் பழக்கம் ஆகியுள்ளனர். இந்த நிலையில் சுப்ரமணியன் குடும்பத்திடம் நெருக்கமாக பழகி, அவரிடம் பணம் இருப்பதை தெரிந்து கொண்ட ராஜேஸ்வரி குடும்பத்தினர் திட்டமிட்டு அவரிடம் பணத்தை அபகரித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். சுப்ரமணியன் குடும்பத்தை சேர்ந்தவர்களை ஏமாற்ற திட்டமிட்ட ராஜேஸ்வரி, தன்னுடைய பூர்வீக சொத்தை பல கோடி ரூபாய்க்கு விற்று இருப்பதாகவும், வருமான வரித்துறை கைவசத்தில் பல கோடி ரூபாய் இருப்பதாகவும், அதனை மீட்க 45 லட்ச ரூபாய் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார்.

இதனால் அவர்களுக்கு உதவி செய்ய முடிவெடுத்த சுப்ரமணியன் 45 லட்சம் ரூபாய் ரொக்கம் கொடுத்துள்ளார். 45 லட்ச ரூபாயை சுருட்டிய ராஜேஸ்வரி மேலும், 20 லட்சம் பணம் கேட்டுள்ளார். இதனை சுப்ரமணியன் நம்பும் வகையில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல தனது நண்பர்கள் ராகுல், உள்ளிட்டவரை வீட்டிற்கு அழைத்து வந்தும் ஏமாற்றியுள்ளார். மேலும், வருமான வரித்துறை சீல், அதிகாரிகள் கையெழுத்து என போலியான ஆவணங்களை காட்டி ஏமாற்றி 60 பவுன் நகைகளை வாங்கி சென்றுள்ளார்.

பல மாதங்கள் ஆகியும் பணம் வராததால், சந்தேகம் அடைந்த சுப்ரமணியன் நாகை எஸ்பி ஓம் பிரகாஷ் மீனாவை சந்தித்து புகார் மனு அளித்தார். அதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் வருமானவரித்துறை அதிகாரிகளை போல நடித்து 45 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 60 பவுன் நகைகளை அபகரித்த 8 பேர் மீது நாகை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.பின்னர் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாக இருக்கும், நாகை ஆண்டோ சிட்டி பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி, ராமகிருஷ்ணன், சாந்தா, நந்தினி, முருகன், வெங்கட பாலாஜி, ராகுல், ராமு, ராஜா ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 1 March 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?