செக்கானூரணி அருகே கிராம மக்கள் சாலை மறியல்: போலீஸார் சமரசம்

செக்கானூரணி அருகே கிராம   மக்கள் சாலை மறியல்: போலீஸார் சமரசம்
X

செக்கானூரணி அருகே இறந்தவரின் உடலை எடுத்து செல்ல மாற்று சமுகத்தினர் எதிர்ப்பு பட்டியலினத்தைச் சேர்ந்த மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

செக்கானூரணி அருகே இறந்தவரின் உடலை எடுத்து செல்ல மாற்று சமுகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் சாலை மறியல்

செக்கானூரணி அருகே இறந்தவரின் உடலை எடுத்து செல்ல மாற்று சமுகத்தினர் எதிர்ப்பு பட்டியலினத்தைச் சேர்ந்த மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே கிண்ணிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கி.ஆலம்பட்டி கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்த மக்களுக்கு பாத்தியப்பட்ட சுடுகாட்டிற்கு செல்ல மாற்று சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியை கடந்து செல்ல வேண்டும் என கூறப்படுகிறது.இந்நிலையில் இன்று இதே கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின வகுப்பைச் சேர்ந்த முனியாண்டி என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது உடலை மாற்று சமுதாய மக்கள் வசிக்கும் பகுதி வழியாக எடுத்து செல்லும் போது எதிர்ப்பு தெரிவித்து கத்தியை காட்டி மிரட்டியதாக குற்றம் சாட்டி, பட்டியலினத்தைச் சேர்ந்த மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் ,அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்து விரைந்து வந்த செக்காணூரணி காவல் நிலைய போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.

Tags

Next Story