மதுரையில் மருது பாண்டியர் சிலைக்கு உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

மதுரையில்  மருது பாண்டியர் சிலைக்கு  உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை
X

மதுரை தேவர் ஜெயந்தி விழாவுக்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ வை விமானநிலையத்தில் வரவேற்ற கட்சி நிர்வாகிகள்

பசும்பொன் தேவர் குருபூஜைக்கு செல்லும் வழியில் தெப்பக்குளத்தில் உள்ள மருதுபாண்டியர் சிலைக்கு உதயநிதி மாலை அணிவித்தார்

மதுரையில் மருதுபாண்டியர் சிலைக்கு உதயநிதிஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், சேலத்திலிருந்து தனி விமானம் மூலம் பகல் 1:50 மணியவில் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அவருடன், அமைச்சர்கள் கே.கே.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி, பெரிய கருப்பன், ராஜ கண்ணப்பன், மூர்த்தி, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வந்தனர்.தேவர் ஜெயந்தி விழாவில், பங்கேற்பதற்காக சேலத்தில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு வெள்ளி வாள் வழங்கி தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

பின்னர், கார் மூலம் தெப்பக்குளம் மருதுபாண்டியர் சிலைக்கு சென்று மாலை அணிவித்து விட்டு , அங்கிருந்து புறப்பட்டு பசும்பொன் தேவர் குரு பூஜையில் கலந்து கொள்ள கமுதி சென்றார்.

பசும்பொன்முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை முன்னிட்டு, பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக சேலத்தில் இருந்து தனி விமான மூலம் திமுக இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் மதுரை விமான நிலையம் வந்தார்.

மதுரை விமான விமான நிலைய வாசலில் திமுகவினர் வெள்ளி வாள் வழங்கி உதயநிதி ஸ்டாலினை வரவேற்றனர்.

மேலும், அமைச்சர்கள் மூர்த்தி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஐ பெரியசாமி, ராஜ கண்ணப்பன், பெரிய கருப்பன், தங்கம் தென்னரசு மற்றும் எம் எல் ஏ கோ தளபதி, சோழவந்தான் எம் எல் ஏ வெங்கடேசன் இளைஞர் அணி டி.ஆர்.பி.ராஜா, பி. செந்தில்குமார் உள்பட 500 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் திமுக கொடியுடன் வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் துணை ஆணையாளர் பெருமாள் ராமானுஜம் தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சோழவந்தானில் வைகை ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா

மதுரை மாவட்டம், சோழவந்தானில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு, சோழவந்தான் வைகை ஆட்டோ ஓட்டுநர் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பாக சோழவந்தான் பேருந்து நிலையம் அருகில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது இதில் வைகைஆட்டோ உரிமையாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமான கலந்து கொண்டனர். இதையொட்டி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மதுரை திடீர் நகர் 76-வது வார்டு திமுக கழகம் சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு திமுக பகுதி செயலாளர் கண்ணன் தலைமையில் கவுன்சிலர் கார்த்தி வட்டச் செயலாளர் யோகராஜ் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Tags

Next Story