மதுரையில் சாலையில் நாற்று நடும் போராட்டம்

மதுரையில் சாலையில் நாற்று நடும் போராட்டம்
X

மதுரை அருகே பாஜக சார்பில் சாலையில் நாற்று நடும் போராட்டம்

மதுரை, எஸ். ஆலங்குளம் குலமங்களம் மெயின் ரோட்டில் ,அழகு மலையான் முதல் தெருவில் 8 மாதமாக பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்

மதுரை அருகே குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி பாஜக சார்பில் சாலையில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.

மதுரை, எஸ். ஆலங்குளம் குலமங்களம் மெயின் ரோட்டில் ,அழகு மலையான் முதல் தெருவில் 8 மாத காலமாக மழை வெள்ளமும் ஆள் உயர பள்ளமும் ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள். மதுரை மாவட்ட ஆட்சியாளரிடமும், மதுரை மாநகராட்சியிடம், பலமுறை மனுவாகவும் தொலைபேசி மூலமாகவும் பலமுறை தெரிவித்தும் மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், பொதுமக்கள் ஆதரவோடும் பாஜக மாநில விவசாய அணி துணைத் தலைவர் முத்துராமன், தலைமையில் நெல் நாத்து நடும் போராட்டம் நடைபெற்றது.

அப்போது, செய்தியாளர்களிடம் முத்துராமன் கூறியதாவது: இங்கு எட்டு மாதம் காலம் பாதாள சாக்கடை திட்டம் நடைபெறுவதாகக்கூறி இங்குள்ள மண்ணை எடுத்து விற்று விடுகிறார்கள். தோண்டிய பள்ளத்தில் சரியான முறையில் மண்ணைப் போட்டு மூடுவதில்லை.ஆள் உயர பள்ளங்களில் விழுந்து விடுகின்றனர். இரவு நேரத்தில் பல இரு சக்கர வாகனங்களும், கார்களும் உள்ளே விழுந்து மக்களுக்கு நிறைய பேருக்கு காயங்கள் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார்கள். நேற்று இரவு கூட ஒரு வயதான மூதாட்டி விழுந்து கை முறிவு ஏற்பட்டுள்ளது.

அதிகாலையில் கார் ஒன்று பள்ளத்தில் விழுந்து ஜேசிபி மூலமாக தூக்கி அப்புறபடுத்தி உள்ளோம். அப்படி, மக்களுக்கு பல இடையூறாக உள்ள பள்ளத்தை மூடக்கோரி பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் தொடர்பு கொண்டாலும் போன எடுப்பதில்லை எந்த ஒரு சரியான முறையில் பதில் வராத காரணத்தால்,இன்று நடவு நடும் போராட்டத்தை செய்துள்ளோம். அடுத்ததாக பள்ளத்தை மூடவில்லை என்றால், பாஜக மூலமாக ஏர் பூட்டி உள்ளும் போராட்டம் நடத்த உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.இதற்கு ,மேலும் மதுரை மாநகராட்சியும் மதுரை மாவட்ட ஆட்சியாளர் அவர்களோ நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பொதுமக்களை திரட்டி கொண்டு மாநகராட்சி முன் பெரிய ஆர்ப்பாட்டமும் செய்ய உள்ளோம் என்று கூறினார்.

மதுரை பாஜக நிர்வாகிகள், இளைஞர் அணி மாவட்ட த்தலைவர் எஸ் எஸ் சுரேஷ் மற்றும் வி.எச்.பி. பொறுப்பாளர் ,தமிழ் முரசு பஜ்ரங்தள் கோட்ட பொறுப்பாளர் பிரவீன் மற்றும் கூட்டுறவு பிரிவு மாநிலச்செயலாளர் பாஸ்கரன், கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளர் சுரேஷ், மற்றும் புதூர் மண்டல் தலைவர் மாணிக்கவேல் மற்றும் கூட்டுறவு பிரிவு மண்டலத் தலைவர் குட்டி மணிவண்ணன் மேலும் 50க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story