திருப்பரங்குன்றம் கந்த சஷ்டி விழா வரும் 25ஆம் தேதி காப்புக்காட்டுதலுடன் தொடக்கம்
![திருப்பரங்குன்றம் கந்த சஷ்டி விழா வரும் 25ஆம் தேதி காப்புக்காட்டுதலுடன் தொடக்கம் திருப்பரங்குன்றம் கந்த சஷ்டி விழா வரும் 25ஆம் தேதி காப்புக்காட்டுதலுடன் தொடக்கம்](https://www.nativenews.in/h-upload/2022/10/20/1607702-img-20221020-wa0037.webp)
பைல் படம்
Kandha Sashti Viratham -திருப்பரங்குன்றம் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு என பெருமை பெற்றது. இங்கு கொண்டாடப்படும் விழாக்களில் கந்த சஷ்டி விழா மிகவும் பிரசித்தி பெற்றது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருகிற 25-ஆம் தேதி கந்த சஷ்டி விழா காப்புக் கட்டுதலுடன் தொடங்குகிறது. 1500 பக்தர்களுக்கு உணவு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான விழா வருகின்ற 25-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. விழா வின் முக்கிய நிகழ்ச்சி யாக வருகின்ற 29-ஆம் தேதி அம்பாளிடம் முருகப் பெருமான் வேல் வாங்குதல் நிகழ்ச்சியும், 30-ஆம் தேதி சந்நிதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோயில் முன்பு சூரசம்கார நிகழ்ச்சியும், விழாவின் சிகர நிகழ்ச்சியாக 31-ஆம் தேதி காலை முருகப்பெருமான் தெய்வானையுடன் எழுந்த ருளி சிறிய சட்டத்தேரில் வலம் வரும் நிகழ்ச்சியும் அன்று மாலை 3 மணி அளவில் பாவாடை தரிசனமும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு விழாவினையொட்டி மதுரை மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளை சேர்ந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் கோவிலில் தங்கி 6 நாட்கள் விரதம் இருப்பார்கள். தங்கி விரதம் இருக்கும் பக்தர்களுக்காக காலையில் பால், எலுமிச்சைச்சாறு, திணை மாவு மற்றும் 1500 பக்தர்களுக்கு உணவு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் காலையிலும் மாலையிலும் நடைபெறும் சண்முகார்ச்சனை விழா வினை பார்ப்பதற்காக கோவிலில் பல்வேறு இடங் களில் பெரிய அளவிலான திரைகள் வைக்கப்பட்டு நேரடியாக ஒளி பரப்பு செய்யப்படும். பக்தர்களுக்கு சரவணப் பொய்கையில்குளிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளும் கோவில் வாசல் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் கழிப்பறை வசதிக ளும் கோயில் நிர்வாகத்தினாலால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 25-ந் தேதி சூரிய கிரகணம் ஏற்பட உள்ளதால் அன்றைய தினம் பிற்பகல் 11.30 மணி அளவில் கோவில் நடை சார்த்தப்பட்டு இரவு 7 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும். தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவை ஒட்டி தங்கி விரதம் இருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்காக காலையில் பால், எலுமிச்சைச்சாறு, திணை மாவு மற்றும் 1500 பக்தர்களுக்கு உணவு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதேபோல, மதுரை அருகே சோழவந்தான் விசாக நட்சத்திர ஸ்தலமான பிரளயநாத சிவன் ஆலயத்திலும், தென்கரை மூலநாத சுவாமி ஆலயத்திலும், இம் மாதம் 25-ம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கி, 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோயில் செயல் அலுவலர்கள், பக்தர்கள் குழுவினர் செய்துவருகின்றனர்..
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu