பிரதமர் மோடி பிறந்த நாள் : நரசிங்கம் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு

பிரதமர் மோடி பிறந்த நாள் : நரசிங்கம் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு
X

மதுரை மாவட்ட பாஜக விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் செந்தில் தலைமையில் நடைபெற்ற அன்னதானம்

மதுரை மாவட்டம், ஒத்தக்கடை நரசிங்க பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது

இந்திய பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 71 -வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம், ஒத்தக்கடை நரசிங்க பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்ட பா.ஜ.க. புறநகர் செயலாளர் தியாகராஜன் முன்னிலையிலும், மதுரை மாவட்ட பாஜக விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் செந்தில் தலைமையிலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் பக்தர்களும் சுமார் 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், மதுரை கிழக்கு தொகுதி பா.ஜ.க மண்டலதலைவர் பூமிநாதன் மாவட்டத் துணைச் செயலாளர் மகேந்திரன் மாவட்ட துணை தலைவர் செல்வி, ஒத்தக்கடை நரசிங்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

Tags

Next Story