மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சி தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது

மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சி தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது
X

பரவை அதிமுக பேரூராட்சித் தலைவர் கலா மீனா.

மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சி தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது.

மதுரை மாவட்டம் பரவை பேருராட்சி மறைமுக தேர்தல் இன்று நடந்தது. இதில் 1- வது வார்டில் அ தி மு க சார்பில் வெற்றி பெற்ற கலா மீனா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பரவை பேரூராட்சியில் அ.தி.மு.க.வுக்கு 8 இடங்கள் உள்ளன. 6வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட துரை சரவணன் (வயது 43)தி.மு.க. சார்பில் பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். சுயேட்சை உள்பட தி.மு.க.வுக்கு 7 இடங்கள் உள்ளன. தேர்தல் நடத்தும் அலுவலர் பூங்கொடி முருகு முன்னிலையில்சமயநல்லூர் காவல் உதவி கண்காணிப்பாளர் பாலசுந்தரம் தலைமையில் 70 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட கலா மீனா வெற்றி பெற்று பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Tags

Next Story