மதுரை அருகே பத்திரப் பதிவு அலுவலகத்தில் அரசு செயலர், அமைச்சர் ஆய்வு

மதுரை அருகே பத்திரப் பதிவு அலுவலகத்தில் அரசு செயலர், அமைச்சர் ஆய்வு
X

மதுரை ஒத்தக்கடையிலுள்ள ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஆய்வு செய்த அமைச்சர் ப. மூர்த்தி மற்றும் அரசுச்செயலர் ஜோதிநிர்மலசாமி

பத்திரப்பதிவு தாமதமாக நடைபெறுவதாக பொதுமக்கள் இடமிருந்து வரப்பெற்ற தகவலை யடுத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

மதுரை பத்திரப்பதிவு அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி மற்றும் அரசுச்செயலர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

மதுரை அருகே ஒத்தக்கடை, ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தில் இணைய சேவை பாதிப்பு காரணமாக பத்திரப்பதிவு தாமதமாக நடைபெறுவதாக பொதுமக்கள் இடமிருந்து வரப்பெற்ற தகவலை அடுத்து, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் ஜோதிநிர்மலசாமி ஆகியோர் நேரில் சென்று பத்திரப்பதிவு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.
இது குறித்து அமைச்சர் ப. மூர்த்தி கூறியதாவது:வணிகவரி துறை தமிழக அரசுக்கு அதிக வருவாயை ஈட்டித் தரும் துறை. அரசின் வளர்ச்சி மற்றும் நல திட்டங்களுக்கு தேவைப்படும் நிதியை, அரசு வரி விதிப்பு கொள்கை மூலம் வருவாயை பெருக்கி, உயர்த்தப்படும் வரியால் பொதுமக்கள் பாதிப்படையாமல் இருக்க வழிவகை செய்யும்.

பத்திரப் பதிவு துறை 138 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு சேவை செய்வதுடன் அரசு நிர்வாகத்திற்கு தேவையான நிதியை திரட்டி தருவதில் மூன்றாவது இடத்தை வகிக்கிறது. மேலும் அரசுக்கும் பொதுமக்களுக்கும் பாலமாக இருந்து ஒளிவு மறைவற்ற சேவையை துரிதமாக செய்ய உதவுகிறது. இந்த குறிக்கோளுடன் இத்துறை நவீன மயமாக்கலுக்கு அடிகோலிட்டுள்ளது

சட்டம் மற்றும் வழிகாட்டுதலை மிக சரியான முறையில் நடைமுறைப்படுத்துவது.உச்சகட்ட வருவாயை பெருக்குவதுடன், அரசின் வளர்ச்சியையும் மேம்பாட்டையும் நடைமுறைப்படுத்துவது.வணிகர்களுக்கு தரமான சேவை கிடைக்க செய்வதுடன் தொழில் மற்றும் வணிக மதிப்பீடு செய்தல் போன்ற குறிக்கோளுடன் வணிகவரி துறை இயங்குகிறது என்றார் அவர்.

Tags

Next Story